31
July, 2026

A News 365Times Venture

31
Friday
July, 2026

A News 365Times Venture

“வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்தா உயர் நீதிமன்றம்

Date:

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் (PAN) அட்டைகள் ஆகியவை இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நடந்த வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த (SIR) பணியின் போது 91 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில், பெரும்பான்மையான வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் என ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்த நிலையில், சுமன் மொல்லா என்பவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் (SIR) பணியின்போது, ​​எனது மருமகன் நாசீரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆதார் அடையாள அட்டை (For Representation)

அந்த மனு முழுமையாக விசாரித்து இன்னும் தீர்ப்பு வரவில்லை என்ற போதிலும், அவர் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரை மீட்டுக்கொண்டுவர வேண்டும். நாசீர் ஓர் இந்தியக் குடிமகன் என்பதற்கு அவரது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பான் அட்டை மற்றும் வங்கிப் புத்தகம் என அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தேபாங்சு பசக் மற்றும் அஜய் குமார் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் பான் அட்டைகள் இந்தியக் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல. வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒரு நபர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருப்பதை மட்டுமே உறுதிப்படுத்துகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்பது மட்டுமே இந்தியக் குடியுரிமைக்கான சான்றாகாது. குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025-ன் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிரூபிக்கும் பொறுப்பை (burden of proof) மனுதாரராலோ அல்லது தடுப்புக் காவலில் உள்ளவராலோ நிறைவேற்ற முடியவில்லை. எனவே, அதிகாரிகளின் முடிவில் தலையிட விரும்பவில்லை.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

மாநில அரசால் வழங்கப்பட்ட வசதியின்படி, மனுதாரரின் வழக்கறிஞர் நாசீருடன் தொலைபேசியில் பேசவும் அந்த அமர்வு அனுமதி அளித்தது. அந்த உரையாடலின்போது, ​​தனது பெற்றோர் இந்தியாவிலேயே இறந்துவிட்டதாக நாசீர் கூறினார். இருப்பினும், நாசீர் தனது பெற்றோர் இந்தியாவில் இறந்துவிட்டதாகக் கூறினாலும், அவர்கள் எங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை அவரால் அடையாளம் காட்ட முடியவில்லை. தடுப்புக் காவலில் உள்ளவரின் பெற்றோர் இந்தியாவில் வசித்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த, மனுதாரர் ஒப்புக்கொண்டால், அவர்களின் உடற்பாகங்களைக் கொண்டு டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு ஏற்பாடு செய்வதற்காக நாங்கள் அது குறித்துக் கேட்டறிந்தோம். தடுப்புக் காவலில் உள்ளவரின் பெற்றோரின் உடல்கள் எங்கு உள்ளன என்பதை அடையாளம் காட்ட மனுதாரரால் முடியவில்லை. அதனால் அவருக்கு எதிர்மறையான முடிவை எடுக்கிறோம்,” என்று நீதிமன்றம் ஆட்கொண்ர்வு மனுவை நிராகரித்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“நான் சங்கியா, காங்கிரஸா? இல்லை, நான் இவள்" – சோனம் வாங்சுக்கின் மனைவி பதில்

நீட் வினாத்தாள் கசிவிற்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

டாஸ்மாக் : `நிபந்தனைகளை மீறினால், உடனடி ரத்து' – செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்!

டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் மற்றும் பார்கள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், திமுக...

சேலம்: குடிநீர் முதல் மருத்துவம் வரை; அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் ஜருகுமலை மேலூர் – கீழூர் மக்கள்

சேலத்திலிருந்து சில கிலோமீட்டர்கள்... ஆனால் வளர்ச்சியிலிருந்து பல ஆண்டுகள் பின்தங்கிய மலைக்...