19
April, 2025

A News 365Times Venture

19
Saturday
April, 2025

A News 365Times Venture

'லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை பயன்படுத்தி, 4000 கிலோ ராக்கெட் செலுத்தும் திட்டம்' – இஸ்ரோ தலைவர்

Date:

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகர்கோவில் வந்திருந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இஸ்ரோவில் 2025-ல் நிறைய சாதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜனவரி 6-ம் தேதி ஆதித்தியா எல்-1 நிலை நிறுத்தியிருக்கிறோம். அதில் இருந்து நிறைய சயின்டிக்கல் டேட்டாக்கள் கிடைத்தன. கடந்த ஜனவரி 16-ல் ஸ்பீடேக்ஸ் எனப்படும் இரண்டு செயற்கைக் கோள்களை இணைத்து சாதனை நடந்தது. மார்ச் 13-ம் தேதி அந்த செயற்கைகோள்களை மறுபடியும் செப்பரேட் பண்ணி சாதனை படைத்துளோம். இந்த சாதனை செய்ததில் இந்தியா 4-வது நாடு ஆகும்.

ஒரு சேட்டிலைட் சுற்றிக்கொண்டிருக்கும், அதை மற்றொரு செயற்கைகோள் கண்காணித்துக்கொண்டிருக்கும் சர்க்கன் நேவிகேஷன் என்ற முறையை செயல்படுத்தி உள்ளோம். ஜனவரி 29-ம் தேதி 100-வது ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது லாஞ்ச் பேட் 42 மாதத்தில் அமைக்க  4000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Narayanan

நம்மிடம் லிக்யூட் ராக்கெட் இன்ஜினில் பெரிய கெப்பாசிட் இன்ஜின் என்பது விகாஷ் இன்ஜின் ஆகும். அது 80 டன் ட்ரஸ்ட் கொடுக்கும். இப்போது திரவ ஆக்சிஜனையும், மண்ணெண்ணெய்யையும் வைத்து 200 டன் ஹெப்பாசிட் உள்ள செமிக்கிரோ இன்ஜினை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக மகேந்திரகிரியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சோதனை கூடம் ஒன்றை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

புதிதாக டெவலப் செய்த எஞ்சினில் சில சோதனைகள் உள்ளன. அதை முடித்துவிட்டு வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் லிக்யூட் ஆக்ஸிஜன் மீத்தேனை வைத்து இயக்கும் மார்க்-3 ராக்கெட்டை நிலவுக்கு அனுப்பும் திட்டம் இருக்கிறது. அதன்மூல மார்க் -3 ராக்கெட் 4000 கிலோ எடையுள்ள செயற்கைகோளை ஜியோ ட்ரான்ஸ்பர் ஆர்பிட்டுக்கு கொண்டுசெல்ல முடியும்.

சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வருகைதர உள்ளதாக கூறியிருக்கிறார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு கொண்டுசென்ற மாடிஃபையில் உள்ள ட்ரஸ்ட் ஹீட் ஆகிவிட்டது. அதே பிரச்னை கடந்த ஆண்டு நமக்கு மகேந்திரகிரியில் நடந்தது. சுனிதா வில்லியம்ஸ்-க்கு ஏற்பட்ட சிக்கலை நாம் படித்து வருகிறோம். வரும் மே மாதம் பி.எஸ்.எல்.வி 61-வது ராக்கெட்டை அனுப்ப இருக்கிறோம். மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து செய்த தொலை தொடர்பு செயற்கைகோளை மார்க் -3 மூலம் ஜூலை மாதம் விண்ணில் அனுப்ப உள்ளோம். மகேந்திரகிரியில் நிறைய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு போலீஸ் மரியாதை

முன்பு இஸ்ரோ மட்டுமே இந்திய விண்வெளிக்கான எல்லா வேலைகளையும் செய்துவந்தது. இப்போது ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, இளைஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை ராக்கெட் தயாரித்தல், சாப்ட்வேர் உருவாக்குதல் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு சப்போர்ட் செய்து, ஊக்குவிக்குவித்து வருகிறோம். கன்னியாகுமரி சன் செட் பாயின் அருகே ஸ்பேஸ் பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குலசேகரபட்டிணத்தில் 95 சதவிகிதம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு புறப்படும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' – யார் இவர்கள்?

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா...

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில்...