17
September, 2026

A News 365Times Venture

17
Thursday
September, 2026

A News 365Times Venture

ரெய்டு: "'ஹிட்லர்' முதல்வர், 'கோயபல்ஸ்' அமைச்சர்கள்; எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி"- அன்பில் மகேஸ்

Date:

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் சோதனை நடந்தது.

திருச்சி: அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை

இந்நிலையில் சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “எனது வீட்டில் அனைத்து அறைகளையும் சோதிக்க அனுமதித்தேன்.

8 மணி நேரத்திற்கும் மேலாக என் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

ஆளுங்கட்சியை விமர்சித்ததால்தான் எனது வீட்டில் ரெய்டு நடத்தி இருக்கின்றனர். எல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி, மடை மாற்றுவதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

ஹிட்லர் முதல்வர், கோயபல்ஸ் அமைச்சர்கள். காலம் வரும்போது பதில் சொல்லுவோம். வரும் 18 ஆம் தேதி என்னை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. சோதனைகளைச் சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Previous article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உண்மAI..?

Source link

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்" – உயர் நீதிமன்றம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி,...

கேரளம்: தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நேரலையை முடக்கிய போலீஸ்; பினராயி விஜயன் கண்டனம்

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வரும் ‘ரிப்போர்ட்டர் டிவி’ தலைமை அலுவலகத்தில்...

ஆவின் விற்பனையைக் குறைத்த நிர்வாகம்; தட்டுப்பாடு ஏற்படும் நிலையா? பாதிக்கப்படும் பால் முகவர்கள்

"நிதி இழப்பைக் காரணம் காட்டி மீண்டும் 10 சதவிகித பால் விநியோகத்தைக்...