26
October, 2026

A News 365Times Venture

26
Monday
October, 2026

A News 365Times Venture

மோடி தந்தை குறித்து கார்கே சர்ச்சைப் பேச்சு; 'சேற்றை வாரிப் பூசும் அரசியல்…' – அமித் ஷா கண்டனம்!

Date:

பீகார் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்துகொண்டு உரையாற்றினார்.

கார்கே சர்ச்சைப் பேச்சு

மல்லிகார்ஜுன் கார்கே தேர்தல் குளறுபடிகள் பற்றியும், இனி அனைத்துத் தேர்தல்களும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

மல்லிகார்ஜுன் கார்கே

அவர் தனது பேச்சில் இந்தியப் பிரதமர் மோடியைச் சாடிப் பேசிவந்தார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர், ‘மோடி எங்கேயும் செல்லமாட்டார்’ (அதாவது மோடிதான் பிரதமராகத் தொடர்வார் என்கிற மாதிரி) என்று கூச்சலிட்டார்.

இவருக்குப் பதில் தரும் விதமாக, ‘மோடியின் அப்பாவும் செல்வார்’ (தோற்கடிக்கப்படுவார் என்கிற ரீதியில்) என்று மேடையில் பேசினார் கார்கே.

கார்கேயின் இந்தப் பேச்சுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் தொடர்ந்து மோடியின் குடும்பத்தை இழிவாகப் பேசி வருகிறது என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறது பாஜக.

அமித் ஷா கண்டனம்

கார்கேயின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பாட்னாவில் மோடி ஜியின் தந்தை குறித்துத் தரக்குறைவான விமர்சனத்தை முன்வைத்துக் கண்ணியத்தின் அனைத்து எல்லைகளையும் மீறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி மோடி ஜி அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. சில நேரங்களில் அவர்கள் அவரது மதிப்பிற்குரிய தாயாரை இழிவுபடுத்தியுள்ளனர்.

சில நேரங்களில் அவரை ‘மரணத்தின் வியாபாரி’ என்று அழைத்துள்ளனர்.மேலும் சில நேரங்களில் அவரது வறுமையைக் கேலி செய்யும் வகையிலும் விமர்சித்துள்ளனர்.

அமித் ஷா பதிவு
அமித் ஷா பதிவு

சேற்றை வாரிப் பூசும் அரசியல் மட்டுமே…

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி தினமும் தன் அநாகரிகத்தின் எல்லைகளைக் கடந்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் சந்தித்த தொடர் தேர்தல் தோல்விகள் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த விரக்தியையும் சகிப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.

இதனால் அவர்களிடம் எந்தக் கொள்கையோ, மக்களுக்கானப் பிரச்னைகளோ இல்லை. வெறுமனே சேற்றை வாரிப் பூசும் அரசியல் மட்டுமே எஞ்சியுள்ளது.

மக்கள் மத்தியில் தங்களது செல்வாக்கை இழந்த காங்கிரஸ், இப்போது சொந்தக் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவை இழந்து வருகிறது.

மோடி ஜி அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக அவர்கள் எப்போதெல்லாம் வெறுப்புப் பேச்சுக்களைப் பேசினார்களோ, அப்போதெல்லாம் மக்கள் காங்கிரஸுக்குத் தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“நாட்டை சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்" – பிரதமர் மோடி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய தரவு மையம்...

கர்நாடகா: `கன்னடர்களுக்கே முன்னுரிமை' தனியார் நிறுவனங்களுக்குத் முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை

கர்நாடகாவிலுள்ள தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு கன்னடர்களுக்கு வேலைவாய்ப்புகளை மறுத்தால், மாநில அரசு...

லத்தீன் அமெரிக்க அரசியல் களம்: `ட்ரம்ப் கொள்கையை வீழ்த்திய லூலா' – இந்த வெற்றி சொல்வது என்ன?| அலசல்

லத்தீன் அமெரிக்கா: அரசியல் களம்பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ...

அம்மா குடிநீர்: “தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா...