22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

மொழி விவகாரம்: `கன்னடர்களும், மலையாளிகளும் உண்மையை ஏற்கத் தயங்கினாலும்..!' – திருமாவளவன் சொல்வதென்ன?

Date:

கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியிருப்பது, தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதெல்லாம் கமல்ஹாசனுக்கு தெரியாது. வரலாறு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.” என தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.

சித்தராமையா- கமல்ஹாசன்

மேலும், கர்நாடகாவிலுள்ள எதிர்க்கட்சியான பா.ஜ.க உட்பட கன்னட அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவன் இந்த விவகாரத்தில், “வரலாற்று மொழியியல் வல்லுநர்கள் தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

பல மொழியியல் அறிஞர்கள் அதைப் பல்வேறு தளங்களில் பதிவு செய்துள்ளனர். இன்றைக்கு கன்னடம், மலையாளம் பேசக்கூடிய மக்கள் அந்த உண்மையை ஏற்கத் தயங்கலாம்.

ஆனால், வரலாறு வரலாறுதான், உண்மை உண்மைதான். அதை எவரும் மறுக்க முடியாது.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்திலும் அந்த உண்மை சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழிலிருந்து பிற மொழிகள் சம்ஸ்கிருத கலப்பால் உருவாகியிருக்கின்றன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட, உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மை.” என்று கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" – விஜய்யைச் சாடிய சீமான்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம்...

"டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்" – உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா.இந்தப் போரை...

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் | Photos

இன்று சென்னை திருவான்மியூரில் அரசு நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை...

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" – தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6...