2
November, 2026

A News 365Times Venture

2
Monday
November, 2026

A News 365Times Venture

முரசுப் புயல்: "மின் அமைப்புகளைச் சீரமைக்க உதவி செய்யுங்கள்" – விஜய்யிடம் பேசிய சந்திரபாபு நாயுடு

Date:

தமிழ்நாட்டைப் போல ஆந்திரப் பிரதேசத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இன்னொருபுறம், அர்னாப் புயலின் தாக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையாக இருந்தது. ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு நிலப்பரப்புகளிலும் அர்னாப் புயலால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அடுத்ததாக வந்துள்ள முரசுப் புயலும் ஆந்திராவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் நேற்று (நவம்பர் 1) ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார்.

பதிவு

விஜய்யிடம் உதவி கேட்ட சந்திரபாபு நாயுடு

விஜய் – சந்திரபாபு நாயுடு தொலைபேசி உரையாடல் குறித்து ஆந்திர முதல்வர் அலுவலக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு…

“புயல் பாதிப்புகளின் பின்னணியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு, ‘முரசு’ புயல் காரணமாகப் பெருமளவிலான மின்கம்பங்கள் சேதமடையும் என்பதால்,

மின் அமைப்புகளைச் சீரமைக்கும் பணிகளுக்குத் தேவையான ஆட்களையும் இயந்திரங்களையும் அனுப்பி உதவுமாறு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களை இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதற்குத் தமிழ்நாடு முதல்வர் நேர்மறையாகப் பதிலளித்து, தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: "வேலை நிறுத்தம் செய்ய மூளை சலவை செய்கின்றனர்" – அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 திரும்பக் கொடுக்கும் நடைமுறை...

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடட்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!

மதுரையில் உள்ள மத்திய சிறையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள்...

புதுக்கோட்டை: இரவோடு இரவாக மாற்றபட்ட முதல்வர் விழா மேடை! – நலத்திட்டப் பயனாளிகள் ஏமாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ளும் அரசு...

இந்தியா கூட்டணி பேரணி: “நீங்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? " – விமர்சிக்கும் பாஜக

தேர்தல் நடைமுறைகளில் "வாக்குத் திருட்டு" (Vote Chori) நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி,...