19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

Date:

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?’ என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்” என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக த.வெ.க அரசு பின்வாங்கியுள்ளது.

அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

த.வெ.க அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது திமுக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' – சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில்...

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க...

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்… கேன்சலாகிறதா அமித் ஷா – எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா....

'தலைவர் ஏண்டா அரசியலுக்கு வந்தார் என நினைத்தேன்…' – அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து...