14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

மீனவர்கள் கைது: `கடமைக்கு கடிதம்; ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம்..!' – தவெக அரசை சாடும் உதயநிதி

Date:

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தவெக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

முதலமைச்சர் விஜய்

மீனவர் பிரச்சினையில், ‘மானே – தேனே – பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா – உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?

ஆட்சிக்கு முன் – ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.

இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சென்னை, புனே, குஜராத் மூலம் சீனா எங்களை ஏமாற்றுகிறது" – அமெரிக்காவின் குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேற்று (ஆகஸ்ட் 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது....

`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும்...

பாஜகவிலிருந்து தன்னுடன் வெளியேறியவர்களுக்கு முக்கியத்துவம்; வேகமெடுக்கும் அண்ணாமலை-ன் We The Leaders

அண்ணாமலை தொடங்கியுள்ள We The Leaders அமைப்பில் அடுத்தகட்டமாக மாநில மற்றும்...

`திருமணம் ஆகாதவர்கள் குடித்தால் ரூ.5,000 அபராதம்!' – மீனவ கிராமத்தின் `மது ஒழிப்பு' முன்னெடுப்பு

மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் காக்கும்...