24
April, 2026

A News 365Times Venture

24
Friday
April, 2026

A News 365Times Venture

“மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்… ஏனென்றால்" – ப.சிதம்பரம் சொல்லும் விளக்கம்

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காரைக்குடியில் தனது வாக்கினைப் பதிவு செய்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால் மாநிலம் முழுவதும் நிலையான அரசு, வளர்ச்சி, மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் ஆகிய மூன்று கோரிக்கைகளே எதிரொலிக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த மூன்றையும் சிறப்பாக வழங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசு, மீண்டும் ஆட்சியை அமைக்கும்.

முதல்வர் ஸ்டாலின்

கடன் வாங்குவது என்பது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகளே கடன் வாங்குகின்றன. கடனுக்கான வட்டியைத் திருப்பச் செலுத்தும் வருவாய் (Service the loan) இருந்தால் கடன் வாங்குவதில் தவறில்லை. திறமையான அமைச்சர்களும் அதிகாரிகளும் இருக்கும்போது வரவு செலவுத் திட்டத்தில் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள், அவை இலவசங்கள் அல்ல. இவை ‘அனைவருக்குமான அடிப்படை வருமானம்’ என்பதன் ஒரு பகுதி. விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் மக்கள் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச வருமானத்தை அரசு உறுதி செய்கிறது. இது பொருளாதார ரீதியாக மக்களை உயர்த்துவதற்கான ஒரு படிநிலையே ஒழிய, இலவசம் கிடையாது” என விளக்கம் அளித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related