16
May, 2026

A News 365Times Venture

16
Saturday
May, 2026

A News 365Times Venture

மின் கட்டணம்: “இதைப் பின்பற்றி செயல்படுத்துங்கள்..!"- அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!

Date:

தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய திட்டத்தின்படி, அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தவெக அரசு பொறுப்பேற்றதும் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கான திட்டத்தில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.

மின்சாரம்

இந்தப் புதிய அரசாணையின்படி, இரு மாதங்களுக்கான மின் பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலமாக 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 2.23 கோடி குடும்பத்துக்கு ரூ. 235 மிச்சமாகும்.

500 யூனிட்டுகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் மின்நுகர்வோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவெக அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டண மென்பொருளில் தகுதி சரிபார்ப்பு, மானிய கணக்கீட்டு பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மின் வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் இதுபற்றி எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மே 10ல் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pawan Kalyan: "விஜய்யுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்" – தொண்டர்களுக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

தமிழ்நாட்டின் முதல்வராக, நடிகர் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல்...

'எங்களுக்காக கோர்ட்ல கேஸ் நடத்துனதே முதல்வர் விஜய்தான்!' – பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு மக்கள்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில்...

Nigeria: “ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் முக்கிய தளபதியை வீழ்த்திவிட்டோம்" – அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலில், ஐஎஸ்...

'குழந்தைகள் நம் சொத்து!'- மூன்றாவது குழந்தை பெற்றால் ₹30,000.. ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கில்,...