7
June, 2026

A News 365Times Venture

7
Sunday
June, 2026

A News 365Times Venture

'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' – விவரம் என்ன?

Date:

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியை சேர்ந்த 157 மாமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை மாநகராட்சியில் தாக்கல் செய்யவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விவரங்களை கேட்டிருக்கிறார். அவருக்கு அளித்த பதிலிலேயே மாநகராட்சி இந்த அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக சங்கரிடம் பேசினோம், ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி ஒரு மாமன்ற உறுப்பினர் தேர்வானவுடன் 90 நாள்களுக்குள் தன்னுடைய மற்றும் தன் குடும்பத்துடைய சொத்து மதிப்பை மாநகராட்சியில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகும் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும். இது விதிமுறை. இதைக் கருத்தில் கொண்டே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவலை கேட்டேன். கடந்த மார்ச் மாதம் தகவல் வேண்டி விண்ணப்பித்தேன்.

மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

தேர்தல் காரணமாக கொஞ்சம் காலதாமதமாக மே மாதம்தான் எனக்கு இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதன்படி சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உட்பட 157 உறுப்பினர்கள் தங்களின் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவே இல்லை. இருக்கிற 200 உறுப்பினர்களில் 157 உறுப்பினர் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது உள்ளாட்சி அமைப்பின் சட்டத்திட்டங்களை துச்சமாக மதிப்பதன் விளைவே. சட்டத்திட்டங்களை கடந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் தங்களின் நேர்மையை நிரூபிக்க சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது தார்மீக பொறுப்பும் கூட. இத்தனை பேர் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய தயங்குகிறார்கள் எனில், இவர்களை முறையாக சட்டத்தின் முன் நிறுத்தி விசாரித்தால் நிறைய அதிர்ச்சிகர உண்மைகள் வெளிவரும்’ என்றார்.

சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாத கவன்சிலர்களின் பட்டியல்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அண்ணாமலை இயக்கத்திற்கு ரஜினி ஆலோசனையா?' – லதா ரஜினிகாந்த் பதில்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' என்ற இயக்கத்தைக்...

`உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கிறதா?'- கடுகடுக்கும் மேயர் பிரியா

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கான...

`அதிமுக-வை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது; பீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழும்' – எடப்பாடி சூளுரை

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அ.தி‌.முக...

‘சீமான் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறியது ஏன்?' – காங்கிரஸ் கடும் தாக்கு!

காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ்...