29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

மருத்துவப் படிப்பு டு குடிமைப் பணி; தென்காசியின் முதல் பெண் ஆட்சியர் – யாரிந்த மோனிகா ராணா ஐ.ஏ.எஸ்?

Date:

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் மோனிகா ராணா, சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். மருத்துவத் துறையிலிருந்து குடிமைப் பணிக்குத் தேர்வாகி, தற்போது மாவட்ட ஆட்சியர் பொறுப்பை எட்டியிருப்பது அவரது பணிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், தனது பயிற்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

மோனிகா ராணா

தொடர்ந்து, மலைப்பகுதி மற்றும் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றிய அவர், தற்போது தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தின் எட்டாவது ஆட்சியராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் மோனிகா ராணா, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

மருத்துவப் படிப்பு, ஐ.ஏ.எஸ் பயிற்சி, பல்வேறு நிர்வாகப் பொறுப்புகள் எனப் படிப்படியாக உயர்ந்து வந்துள்ள அவரது அனுபவம், தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`நான் இல்லை என்றாலும் தொண்டர்கள் பணியாற்றுவார்கள்; திசை திருப்பவே இந்தச் சோதனை!' – கே.என்.நேரு

முன்னாள் தி.மு.க அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்...

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்; அரசு மருத்துவமனைகளில் அதிகரிக்கும் அட்மிஷன்- பெட்கள் அதிகரிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தால் தாய்மார்கள்...

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' – ஆவேசமான மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது....

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

தி.மு.க வேலூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான...