31
October, 2026

A News 365Times Venture

31
Saturday
October, 2026

A News 365Times Venture

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் பேட்டியின்போது மின்தடை! – நிர்மல் விளக்கம்

Date:

நேற்று (அக்டோபர் 30), மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் மேற்கொண்டார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

தரிசனத்திற்குப் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்திக்கையில் இரண்டு முறை அடுத்தடுத்து மின்சாரம் தடைப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார்.

நிர்மல் குமார், “மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் இன்று மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மாலை 5:35 மணிக்கு வருகை தந்தார்.

தரிசனம் முடிந்த பிறகு மாலை 6:25 மணிக்கு வெளியேறினார்.

குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி, பிற்பகல் 3:30 மணி முதல் கோயில் முழுவதும் ஜெனரேட்டர் மின்சாரம் மூலமே இயங்கியது.

நிர்மல் குமார் பதிவு

ஏன் மின்வெட்டு?

இதற்கான மின்சாரப் பராமரிப்புப் பணிகள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவிச் செயற்பொறியாளர் உதவிக்காகக் கோயில் மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தார்.

தரிசனம் முடிந்த பிறகு, குடியரசுத் துணைத் தலைவர் கிழக்குக் கோபுர வாசலுக்கு எதிரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அந்தச் சமயத்தில், கோயில் மின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட உள்சுற்று மின்கோளாறு (internal fault trip) காரணமாகக் கோயிலுக்குள் சிறிது நேரம் மின் விநியோகம் தடைபட்டது.

உடனடியாகச் செயல்பட்டு, அடுத்த 2 நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர் மின்சாரத்திலிருந்து மின்சார வாரிய மின்சாரத்திற்குத் தொடர்பு மாற்றப்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும்… மீண்டும்!

ஏற்கெனவே தமிழ்நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை பரவலாக இருந்து வருகிறது. இதுவரை தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளில் மின்வெட்டு ஏற்பட்டது.

இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று, குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட நிகழ்வில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தற்கொலை செய்யும் விவசாயிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது" – சிவசேனா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அடிக்கடி சர்ச்சையாக எதையாவது பேசி...

தூத்துக்குடியில் 4 நாள்களில் 7 கொலைகள்: "காவல்துறையை நிர்வகிக்கத் தெரிந்தவரிடம் ஒப்படைங்க" – கனிமொழி

தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்த சசிகலா என்பவரை அவரது வீட்டிற்குள்ளேயே கொலை...

அன்பில் கைது, ஏக குஷியில் திமுக-வினர் பசும்பொன் பயணம் – 'நோ' சொன்ன முதல்வர் அலுவலகம் | கழுகார்

சிக்கிய தி.மு.க., த.வெ.க புள்ளிகள்!போதைப்பொருள் விற்பனையில் கூட்டணி...நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த...

முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம்: 'தனி விமானம், ரோடு ஷோ, திறப்பு விழா…' – விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக முதலமைச்சர் விஜய், வரும் நவம்பர் 2-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்முறையாக...