29
October, 2026

A News 365Times Venture

29
Thursday
October, 2026

A News 365Times Venture

பேராசிரியர் கலையரசன் கைது விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்த கலையரசன்

Date:

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், ‘The Dravidian Model’ நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.

தமிழகப் பொருளாதார நிலவரம் குறித்து தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வரும் கலையரசன் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி கனிமொழி, எம்.பி சு. வெங்கடேஷன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த வழக்கை நடத்திய உள்ளூர் காவல்துறையினர் தவறு இழைத்துவிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் ஒப்புக்கொண்டார்.

கலையரசன்

காவல்துறை தலைமை இயக்குநரின் (DGP) தலையீட்டைக் கோரி அளித்த புகாரில் பேராசிரியர் கலையரசன், “என்னுடைய தரப்பு விளக்கத்தை அளிப்பதற்குக்கூட ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்படாமல், நான் நடத்தப்பட்ட விதம் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய், பேராசிரியர் கலையரசனைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8

"சட்டம் சொல்வது என்ன?" 6-வது பகுதியில், வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களின் உரிமைகள்...

பிரேசில் தேர்தலில் லுலா வெற்றி! அமெரிக்காவிற்கு தப்பிச்சென்ற போல்சோனாரோ 'நானே அதிபர்' என அறிவிப்பு!

பிரேசிலில் நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளார் அந்த நாட்டின் அதிபர்...

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; பரபரக்கும் திருச்சி மாவட்ட திமுக!

தி.மு.க முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில்...

`ஜீரோ கட்சின்னு சொல்றாங்க… அம்பாசமுத்திரத்துல பொது வேட்பாளரா களமிறங்குறேன்!' – சீமான்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை...