7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

பெரியார் நூலக விவகாரம்: 'அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல!' – சேகர்பாபு

Date:

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் பெரியார் அறிவுலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருந்தார்.

பெரியார் அறிவுலகம்

அதாவது பெரியார் அறிவுலகத்தில் ‘அகல்விளக்கு’ பதிப்பகத்தின் பெயரில் 1,800 நூல்கள் உள்ளதாகவும், 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கும் தான், அகல்விளக்கு பதிப்பகத்தைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்றும் குறிப்பிட்ட எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்ற பதிப்பகங்களில் 300 பக்க நூலின் விலை ரூ.350 இருக்கும்போது அகல்விளக்கு பதிப்பகத்தின் 300 பக்க நூலின் விலை ரூ.1,445 ஆக இருக்கிறது.

நூல்களில் இடம்பெற்றுள்ள பன்னாட்டுத் தர புத்தக அடையாள எண்கள் (ISBN) போலியானவை என்றும், போலி நூல்களை விநியோகித்து கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” பெரியார் நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டவை அல்ல.

ஜூன் மாதத்தில் முத்திரையிடப்பட்ட புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருக்கின்றன. ஜூன் மாதத்தில் யாருடைய ஆட்சி நடைபெற்றது. தவெகவின் ஆட்சிதான் நடைபெற்றது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல புத்தகங்கள் அந்த நூலகத்திற்கு வாங்கியதை சமூக ஆர்வலர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆகவே முழுமையான உண்மை வந்த பிறகு மக்களுக்கு இது குறித்து தெரிய வரும்.

எங்களுடைய ஆட்சிக் காலத்தில் எங்கள் முதல்வர் படி படி என்று சொன்னாரே தவிர விசுவல் வாரியர்ஸை போல தவறு செய்துவிட்டு திருந்துங்கள் என்று சொல்ல மாட்டார். படி படி என்று சொல்லக்கூடியவர் எங்கள் முதல்வர். இன்றைய முதல்வர் குடி குடி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒன்றிய – மாநில உறவுக் குழு கலைப்பு: "அதிகாரச் சமத்துவத்திற்கு பேரிழப்பு" – சு.வெங்கடேசன் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற...

உயர்மட்ட குழு கலைப்பு: "தவெக அரசின் சின்ன புத்தி கடும் கண்டனத்திற்குரியது"- திமுக அறிக்கை

கடந்த திமுக ஆட்சியில் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றும் சட்ட வரம்புகளை...

'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

22 வருடங்களுக்குப் பிறகு 'சண்டியர்' படத் தலைப்பு மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது!நடிகர் கமல்ஹாசன்...

"சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?"- எடப்பாடி விமர்சனம்

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது...