19
May, 2026

A News 365Times Venture

19
Tuesday
May, 2026

A News 365Times Venture

’பெயருக்கு முன்னால் `டாக்டர்' என போடுவது ஏன்?’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. விளக்கம்

Date:

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை போக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்.

தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வருகின்றனர். அதற்கான மருந்துகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். அவையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும். அதே சமயம் நாய் கடிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

கனிமொழி சந்தோஷ்

B.A.B.L படிப்பு என அபிடவிட்டில் குறிப்பிட்டுவிட்டு, டாக்டர் என பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு இருப்பதாக எழுந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு, “நான் டாக்டரேட் பட்டம் ஜோதிடத்தில் வாங்கி உள்ளேன். என்னுடைய புரொபஷன் சட்டப்படிப்புதான். நான் அடிப்படையில் வழக்கறிஞர். ஜோதிடத்தில் ஆர்வம் என்பதால், அதில் டாக்டரேட் முடித்துள்ளேன்.

மருத்துவம் படித்த டாக்டராக இருந்தாலும் சரி, டாக்டரேட் படித்திருந்தாலும் சரி அதனை டாக்டர் என்றுதான் பொதுவாக குறிப்பிடுவார்கள். அப்படி இருக்கும்போது, டாக்டர் என்பது எனக்கு புனைப்பெயராக மாறிவிட்டது. என்னுடைய வலைதள வீடியோக்கள் அனைத்தும் உடல் நலம் சார்ந்து அதிகமாக இருக்கும். அதனால் டாக்டர் படித்துக் கொண்டு இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறேன் என்று புரிந்து கொண்டுவிட்டார்கள். நான் அடிப்படையில் சட்டப்படிப்பு படித்தவர் ஜோதிடத்தில் டாக்டரேட் முடித்துள்ளேன்” என பதிலளித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: ’அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினாரா?’ – சர்ச்சையில் MLA கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ்...

Iran: "கத்தார், சவுதி, அமீரகம் கேட்டுகொண்டதால் தற்காலிக போர் நிறுத்தம்; ஆனால்…"- ட்ரம்ப் அறிவிப்பு

"ஈரானுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு வேகமாகச்...

`தவெக ஆட்சிக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ?' – சட்டம் ஒழுங்கு குறித்து டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியாக தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றிருக்கிறது. முதல்வராக சி.ஜோசப்...