30
August, 2026

A News 365Times Venture

30
Sunday
August, 2026

A News 365Times Venture

புதுச்சேரி: `கார் கொடுத்தீங்க, டிரைவர்?'- `ஹெல்மெட்’ அணியாமல் வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு அபராதம்

Date:

புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முத்தியால்பேட்டை தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு கார் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு டிரைவர் நியமிக்கப்படவில்லை. அரசுக்கு அதை சுட்டிக்காட்ட நினைத்த எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன், நேற்று இரு சக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசு அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவர்கள் வைத்துள்ளனர். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் டிரைவர்கள் நியமிக்கப்படவில்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தருவதில்லை” என்று அதிகாரிகளைச் சாடியிருந்தார்.

புதுச்சேரி அரசு

அதையடுத்து எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் சட்டப்பேரவைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த வீடியோ வைரலானதிற்கு நிகராக, அவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததும் சமூக வலைதளத்தில் விவாதப் பொருளானது. அதேபோல அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் வாகனப் பதிவெண்ணும் இல்லாமல் இருந்தது.

`சாதாரண மக்களுக்கு பொருந்தும் சட்டம், எம்.எல்.ஏக்களுக்கு பொருந்தாதா?’ என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து வாகனத்தில் பதிவெண் இல்லாததற்கு ரூ.500, ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.1,500/- அபராதம் விதித்தனர் போக்குவரத்துப் போலீஸார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் அவர் இந்து அல்ல’ – மோகன் பகவத்

‘ஒரே உலகம், ஒரே மனிதகுலம்’ என்கிற நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 29)...

'முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்'- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல்...

`மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை' – நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில்,...

திமுக: தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் புதிய மாவட்டங்கள்! – கருத்து கேட்க ஸ்டாலின் முடிவு

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், கட்சியை...