12
June, 2026

A News 365Times Venture

12
Friday
June, 2026

A News 365Times Venture

பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு – அகண்ட காங்கிரஸ் சாத்தியமா?

Date:

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணையுமா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி முற்றிவரும் நிலையில், காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் அதன் தாய் அமைப்புக்குள் திரும்ப திட்டமிடுவதாக அரசியல் வட்டாரங்களில் தீவிரமான யூகங்கள் எழுந்துள்ளன.

இந்த இணைப்புப் பேச்சுவார்த்தைகளை “ஆதாரமற்ற வதந்திகள்” என்று காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நிராகரித்தாலும், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நானா படோலே, இதற்கான நகர்வுகள் நடந்து வருவதாக ஒரு தெளிவான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

“ஒத்த சித்தாந்தம் கொண்ட கட்சிகள் காங்கிரஸுடன் இணைவதற்கு தயாராகி வருகின்றன,” என்று கூறியுள்ள படோலே, “சரத் பவாரும், மம்தா பானர்ஜியும் காங்கிரஸுடன் இணைவது குறித்து மனதை தயார்படுத்தி வருகின்றனர்,” என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது கூட்டணியாக இருக்காது, முழுமையான இணைப்பாகவே இருக்கும் என்றும் அவர் நம்புவதாக தெரிவித்தார்.

சரத் பவார், மம்தா பானர்ஜி

தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியை இணைப்பதற்கான ஒரு சமிக்ஞ்சை ஏற்கனவே சரத் பவார் தரப்பிலிருந்து அளிக்கப்பட்டு, அது செயல்பாட்டில் இருப்பதாகவும் படோலே கூறினார்.

“சரத் பவாரிடம் இருந்து இதற்கான சிக்னல் முன்னரே கொடுக்கப்பட்டுவிட்டது, ஆனால் சில காரணங்களால் தாமதமானது. ஆனால், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், மதச்சார்பற்ற, பன்மைத்துவ சித்தாந்தங்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, வாக்குகள் பெருமளவில் சிதறுவதைத் தடுக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த செயல்முறை இப்போது தேசிய அளவில் தொடங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸாக இருந்தாலும் சரி, பவாராக இருந்தாலும் சரி, அனைவரும் காங்கிரஸுடன் இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர்,” என்றும் படோலே கூறினார்.

இணைப்பிற்கு ஆதரவுக் குரல்கள்

சில நாட்களுக்கு முன்பு, சிவசேனா (UBT) தலைவர் சஞ்சய் ராவத்தும் இதே போன்ற கருத்தை எதிரொலித்தார். “காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற சிறிய கட்சிகளை மீண்டும் பெரிய கட்சியுடன் இணைப்பதற்கு சரத் பவார் முயற்சிகள் எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். “காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும், அதிலிருந்து உருவான சிறிய கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார் ராவத்.

தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, “முதலில் மழை பெய்யட்டும், பிறகு குடை வேண்டுமா அல்லது ரெயின்கோட் வேண்டுமா என்று பார்ப்போம்,” என்று ராவத்தின் கருத்தை நிராகரிக்காமல் மர்மமான பதிலை அளித்தார்.

இந்த அரசியல் விவாதங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட், சிறிய கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து ராகுல் காந்தியை தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ராகுல் காந்தி-சோனியா காந்தி
ராகுல் காந்தி-சோனியா காந்தி

“சஞ்சய் ராவத் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது. அதற்கான நேரம் வந்துவிட்டது. காங்கிரஸிலிருந்து பிரிந்து பிராந்தியக் கட்சிகளாக மாறிய அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இணைய வேண்டும், மேலும் அவர்கள் ராகுல் காந்தியை மனதார தலைவராக ஏற்க வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர் ராகுல் காந்திதான் என்ற செய்தி நாடு முழுவதும் தெளிவாகச் செல்ல வேண்டும். அப்போது மக்கள் உங்களை வெற்றி பெறச் செய்வார்கள்,” என்று அவர் கூறினார்.

கடந்த காலமும், நிகழ்கால சந்திப்புகளும்

சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி ஆகிய இருவரும் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று தங்களது பிராந்தியக் கட்சிகளைத் தொடங்கியவர்கள். மம்தா பானர்ஜி 1998-ல் திரிணாமுல் காங்கிரஸையும், சரத் பவார் 1999-ல் சோனியா காந்தியின் “வெளிநாட்டு பூர்வீகம்” என்ற பிரச்சினையின் பேரில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் நிறுவினார். அவருடன் வெளியேற்றப்பட்ட தாரிக் அன்வர் பின்னர் காங்கிரஸுக்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்திகளுக்கு மேலும் தீனி போடும் விதமாக, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் இந்த வாரம் அடுத்தடுத்து சந்தித்தனர். ஒன்றரை மணி நேரம் நீடித்த சந்திப்பில், திரிணாமுல் கட்சி ஒரு வலுவான கூட்டணியை விரும்புவதாகவும், எதிர்க்கட்சிக் குழுவில் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்பதாகவும் அபிஷேக் பானர்ஜி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இணைப்புக்கான எந்தவொரு தொடக்கமும் திரிணாமுல் தரப்பிலிருந்துதான் வர வேண்டும் என்றும், தாங்களாக இந்த நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பு தெளிவாகக் கூறியுள்ளது.

மீண்டும் அகண்ட காங்கிரஸ் சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாற்றி மாற்றிப் பேசும் ட்ரம்ப்; பிடிகொடுக்காத இஸ்ரேல்… முடிவுறாமல் தொடரும் ஈரான் போர்!

'இதுவரையில் இல்லாத அளவிலான தாக்குதல்', 'கடுமையான தாக்குதல்' - இப்படி இரண்டு...

`மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!' – சிறப்புத் தொகுப்பு அறிவித்த முதல்வர் விஜய்

காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை...

தொடர் மின்வெட்டு: “விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின்...

"நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன்; எப்போது மற்றும் யாருடன்.!"- ராகவா லாரன்ஸ் அதிரடி

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ``நான்...