4
October, 2026

A News 365Times Venture

4
Sunday
October, 2026

A News 365Times Venture

`பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்..!” – கே.என்.நேரு விமர்சனம்!

Date:

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் தந்தை பெரியாரின் கொள்கைகளை பலர் பேசிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தந்தை பெரியார் குறித்து சீமான் தரக்குறைவாகப் பேசுகிறார். தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு வர காரணம் தந்தை பெரியார் தான். தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அ.தி.மு.க-வை பா.ஜ.க-வினர் மிரட்டி வருகிறார்கள். தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது. தி.மு.க-விற்கு எதிராக எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது.

கலந்துகொண்டவர்கள்

இன்று தனது கட்சியின் 2- ம் ஆண்டு தொடக்க விழாவில் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் மேடையேறியுள்ளார். யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் நமக்கு கவலையில்லை. ஏனென்றால், பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர். தனது கட்சிக்கு டெபாசிட் கூட வாங்காதவர். பீகார் தேர்தல் முடிவுகள் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. அவர் இங்கு வந்து தொகுதி வியூகங்கள் வகுப்பதெல்லாம் எப்படி இருக்கும்?. தி.மு.க தலைவர் அதைத்தாண்டி வியூகங்களை வகுத்து வெற்றி பெறுவார்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`நீங்க கண்டிப்பா வரணும்..!' – உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு அழைத்த நெதன்யாகு!

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய...

"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" – நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல்...

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்? – `ராஜினாமா' முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலேகா!

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள...

"ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம்" – விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற...