29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

பாமக: அன்புமணி கட்சியை விட்டு நீக்கமா…? – நிறுவனர் ராமதாஸ் அளித்த பதில் என்ன?

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இன்று( ஜூன் 1) தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய ராமதாஸ் செய்தியாளர்களைச்  சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம்  திலகபாமா உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்வதுபோல் அன்புமணி ராமதாஸையும் கட்சியில் இருந்து  நீக்கம் செய்வீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு அவர், “இதைப்போன்ற தேவை இல்லாதக் கேள்விகளைக் கேட்காதீர்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.

ராமதாஸ்

தொடர்ந்து பேசிய அவர், “  ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் மகளிர் பெருவிழா மாநாடு நடத்தப்படும்.

46 ஆண்டுகளாக பாமகவை நான்தான் இயக்கி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை.

என்னை யாரும் இயக்கவும் முடியாது. ஒவ்வொரு கட்சியிலும் குடும்பத்திலும் நடப்பதுதான் பாமகவிலும் நடக்கிறது. இந்த விவகாரத்தை நாங்களே பெரிதுப்படுத்தவில்லை.

பாமக நிர்வாகிகள் நியமனம், நீக்கம் விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம். சுதந்திரமாக செயல்படுவது அன்புமணியின் உரிமை” என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து, பாமக நிர்வாகிகளை தலைவர் பொறுப்பில் உள்ள தன்னால் மட்டுமே நீக்க முடியும் என அன்புமணி கூறியது குறித்து ராமதாஸிடம் கேட்ட கேள்விக்கு, ” சட்ட விதிகளை இன்னும் பார்க்கவில்லை. சட்டவிதிகளை பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன்” என்றிருக்கிறார். 

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி – ராமதாஸ்

அன்புமணியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு,” உலகில் பல அதிசயங்கள் நடக்கிறது. அது எப்போது எப்படி நடைபெறும் என சொல்ல முடியாது” என்று  ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' – திருமாவளவன் விளக்கம்!

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,...

ஜூலை-2ல் விஜய் உடன் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'- இணைப்பு விழாவுக்கு தயாராகும் ரத்தத்தின் ரத்தங்கள்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைச் சுற்றி வரும் தவெக சஸ்பென்ஸ் பல நாள்களாக...

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு...

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக...