19
April, 2025

A News 365Times Venture

19
Saturday
April, 2025

A News 365Times Venture

`பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்' – அலகாபாத் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்!

Date:

நாட்டின் மிகப் பழமையான நீதிமன்றங்களுள் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளிப்படும் சமீபத்திய அவதானிப்புகள் பலவும் பெண்கள் மீது உணர்வில்லாத கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த சில மாதங்களில் அலகாபாத் நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் கருத்துகள் விமர்சனங்களை எதிர்கொண்டது.

Justice BR Gavai

முக்கியமாக, ஒரு நபர் அமர்வில் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, சிறுமியின் பாலியல் வழக்கில், தவறாக தொட்டதையும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்ததையும் பாலியல் வன்புணர்வு முயற்சியாக கருத முடியாது என தீர்ப்பளித்திருந்தார்.

அதே நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதியான சஞ்சய் குமார் சிங், “பாதிக்கப்பட்ட பெண் குடித்திருந்ததால் அவரே பிரச்னையை வரவழைத்துக்கொண்டுள்ளார்” எனக் கூறி பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினார்.

உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஏற்கெனவே கடந்த மார்ச் 17-ம் தேதி நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நிறுத்திவைத்து, அந்த வழக்கை தாமாக முன்வந்து மேல்முறையீட்டுக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா

அப்போதே அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அவதானிப்புகளை, “முற்றிலும் உணர்ச்சியற்றது, மனிதாபிமானமற்றது” மற்றும் “சட்டத்தின் கோட்பாடுகளுக்கு உட்படாதது” என காட்டமாக விமர்சித்தது உச்சநீதிமன்றம்.

மீண்டும் அதேப்போன்ற அவதானிப்புகள் வெளியானதால் அலகாபாத் நீதிமன்றத்துக்கு எதிராக காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்.

“உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? அதே நீதிமன்றத்தைச் சேர்ந்த மற்றொரு நீதிபதி இப்படிப்பட்ட கருத்தைக் கூறியிருக்கிறார்… ஏன் இதுபோன்ற அவதானிப்புகள்? இதுபோன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என கவாய் தலைமையில் நீதிபதி ஏ.ஜி.மாசிஹ் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” – பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு...

அதிமுக: "தலைமையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்காதீர்கள்" – கட்சியினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்

தலைமையின் அனுமதி இல்லாமல் யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என அ.தி.மு.க...

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு...

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில்...