17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்? – ஆர்.பி உதயகுமார் சொன்ன காரணம்

Date:

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்து, தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு, வார விடுமுறைகள் என 5 நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் அவை கூடியது. இந்த நிலையில், ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவை விதி 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு பேசினார். முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்பாவு

சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “கேள்வி நேரம் முடியும் வரை அமைதியாக இருந்தோம். பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப சட்டமன்ற அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டபோது, பல்வேறு காரணங்களைக் கூறி தட்டிக்கழிக்கிறார்ரே தவிர பேசுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பேரவை விதி 72-ன் கீழ், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால் சபாநாயகர் தொடர்ந்து ஜனநாயக படுகொலையை செய்துவருகிறார்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`5 கட்சி அமாவாசை; செந்தில் பாலாஜி அரக்கனை விட கொடூரமானவர்’ – எடப்பாடி பழனிசாமி சாடல்

கோவை சித்தாபுதூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க...

வறுமையில் விழவிருக்கும் 25 லட்சம் இந்தியர்கள், ஐ.நா எச்சரிக்கை… என்ன செய்யப்போகிறது அரசு?

ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை,...