23
October, 2026

A News 365Times Venture

23
Friday
October, 2026

A News 365Times Venture

"பாஜகவால் அடையாளம் பெற்றவர் பாஜகவை விமர்சிக்கிறார்" – மீண்டும் அண்ணாமலையைச் சீண்டும் வானதி சீனிவாசன்

Date:

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க-வால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பா.ஜ.க-விலிருந்து மட்டும் வெளியேறவில்லை. பா.ஜ.க தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தேசியம், இந்துத்துவத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்கள் என்பதை, ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள்.

யார் கொள்கை வழி நிற்பவர்கள் என்பதை இப்போது, தேசியவாதிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள்தான், இந்தியாவைச் சீர்குலைக்க நினைக்கும் அன்னிய நாடுகளின் சதித் திட்டத்திற்கு உடன்படுபவர்கள்தான் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என மறைமுகமாக அண்ணாமலையை விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் மறைமுகமாக அண்ணாமலையை விமர்சிக்கும் வகையில் தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் தேசியத்திற்கு அத்தாரிட்டி என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் விருப்பம். முன்பெல்லாம், காங்கிரஸ், இடதுசாரிகள், தி.மு.க, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், ’தேசியத்திற்கு பா.ஜ.க மட்டும்தான் அத்தாரிட்டியா, பா.ஜ.க-வை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதியா?’ என்று பா.ஜ.க-வினரை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அதே கேள்வியை, இப்போது, பா.ஜ.க-வால் அரசியல் அடையாளம் பெற்று, வெளியேறியவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வானதி சீனிவாசன்

பா.ஜ.க ஒருபோதும், ‘தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு அத்தாரிட்டி’ என்று சொன்னதில்லை. சொல்லப் போவதும் இல்லை. ஆனால், ‘தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு பா.ஜ.கதான் அத்தாரிட்டி’ என்பது, தேச விரோதிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், ‘நான் தேசியவாதி’ என்றும், இந்தியாவில் செயல்படும் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும், ‘நாங்கள் தேசியவாதி’ என்றும் உணர வேண்டும்.

‘தேசியத்துக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி’ என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் விருப்பம். 1980ம் ஆண்டில் மும்பையில் நடந்த பா.ஜ.க தொடக்க விழாவில் பேசிய அடல் பிகாரி வாஜ்பாய், ‘Nation First; Party Next; Self Last’ என்பதுதான் பா.ஜ.க-வின் கொள்கை என்று பிரகடனம் செய்தார். ஒவ்வொரு பா.ஜ.க தொண்டரின் உயிர்மூச்சும் இதுதான். பா.ஜ.க-வினருக்கு எல்லாவற்றையும் விட தேசம்தான் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’பொய்க்குற்றச்சாட்டில் கைது, அலைக்கழிப்பு, சிரித்து கேலி செய்த போலீஸ்’- NTK கார்த்திகா குற்றச்சாட்டு

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா,...

போராட்டங்களால் தடுமாறும் தவெக மேலிடம்? புலம்பும் உளவுத்துறை; திணறும் போலீஸ்

தலைநகரான சென்னையில் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரங்களில் தவெக அரசின் 'மேலிடம்'...

'மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கலாம்!' – மதுரை–குருவாயூர் ரயிலில் Vistadome பெட்டி | Photos

தமிழ்நாட்டில் முதன்முறையாக 'விஸ்டாடோம்' ரயில் பெட்டி - இயற்கையை கண்டு...