13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

Date:

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலும் இரண்டாக உடைந்தது.

13.05.2026 அன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தபோது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்தனர்.

அதேசமயம் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்கு ஆதரவளித்தனர். அதன் காரணமாக விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி 144 எம்.எல்.ஏ-க்களுடன் மெஜாரிட்டியை நிரூபித்தது.

முதல்வர் விஜய்

அதையடுத்து த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், அருண்மொழித்தேவன் உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேலும், நீக்கப்பட்டிருந்தவர்களால் ஓரம் கட்டப்பட்டிருந்தவர்களுக்கும், கட்சியால் டம்மியாக்கப்பட்டிருந்தவர்களுக்கும் பொறுப்புகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த எம்.சி.சம்பத்தின் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரனுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அருண்மொழித்தேவனின் பதவி பறிக்கப்பட்டு, நெய்வேலி தொகுதியில் எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரனுக்கு கொடுக்கப்பட்டது.

தற்போது கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றிருக்கும் எம்.சி.தாமோதரன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உடன் பிறந்த மூத்த சகோதரர். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றிபெற்ற தாமோதரனை, தன்னுடைய முதல் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக அமர வைத்தார் ஜெயலலிதா.

அடுத்து வந்த 1996 தேர்தலில் அந்தத் தொகுதியில் தாமோதரனின் மனைவியை நிறுத்த நினைத்தார் ஜெயலலிதா. ஆனால் தாமோதரன் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவரை டம்மியாக்கிய ஜெயலலிதா, அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து எம்.சி.சம்பத்துக்கு வழங்கினார்.

அதையடுத்து ஜெயலலிதா இறக்கும் வரை அவரது குட்புக்கில் இருந்த சம்பத், கடலூர் மாவட்டத்தின் குறுநில மன்னராக வலம் வந்தார்.

எம்.சி.சம்பத்

அ.தி.மு.க ஆட்சியில் அமரும்போதெல்லாம் அமைச்சராகவே இருந்தார் எம்.சி.சம்பத். அவரைத்தான் இப்போது ஓரம்கட்டினார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு தன்னுடைய ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தைக் கைப்பற்ற நினைத்தார் எம்.சி.சம்பத்.

ஆனால் அதுவும் புதிய மாவட்டச் செயலாளர் தாமோதரன் வசமே சென்றது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் புதிய மாவட்டச் செயலாளர் பக்கமே நின்றதால் நொந்துபோனார் எம்.சி.சம்பத். மேலும், புதிய மாவட்டச் செயலாளர் உடன்பிறந்த அண்ணன் என்பதால், அமைதியாக ஒதுங்கிக் கொண்டார்.

ஆனால் அதிகாரத்தை சுவைத்தவர்களால் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது என்பது, அரசியல் அரிச்சுவடி சொல்லும் பாடங்களில் ஒன்று. அதன்படி, `பவர் முக்கியம் அமைச்சரே…!’ என்ற ரீதியில் த.வெ.க பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்திருக்கிறார் எம்.சி.சம்பத்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...