7
October, 2026

A News 365Times Venture

7
Wednesday
October, 2026

A News 365Times Venture

பழனி மட நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது; சூடுபிடிக்கும் விசாரணை

Date:

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து நில அபகரிப்பு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி (CBCID) போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் ஏற்கனவே தீவிர விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், முறைகேடாக நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநி புதூரைச் சேர்ந்த சேதுபதி, போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்த வழக்கறிஞர், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நில மோசடிக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேரை ஏற்கனவே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

​இந்நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மோசடி பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த மேலும் முக்கியப் புள்ளிகள் சிக்கியுள்ளனர்.

சிவக்குமார்

பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி, தற்போது பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ள சிவசங்கரி என்ற பெண்ணை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.

​மேலும், இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயபிரகாசுடன் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோத ஆவணப் பணிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்ட வழக்கறிஞர் சிவக்குமார் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

​கைது செய்யப்பட்ட பெண் ஊழியர் சிவசங்கரி, வழக்கறிஞர் சிவக்குமார் ஆகிய இருவரிடமும் இந்த ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழநியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடத்து நில மோசடி வழக்கில் அரசு ஊழியர் பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜந்தர் மந்தர்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அக்டோபர்...

`முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை?' – அமைச்சர் ராஜ் மோகன் அளித்த பதில் இதுதான்!

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்....

`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை...

'வெற்றிப் பயணத்தால் மூன்றில் ஒரு பங்கு வருமானம் போச்சு!' – ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

முதல்வர் விஜய் தொடங்கி வைத்த வெற்றிப் பயணம் என்கிற கட்டணமில்லா பேருந்து...