14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

"பல்கலைக்கழகங்களை உங்கள் கழக அலுவலகங்களாக மாற்றிவிடாதீர்கள்" – தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

Date:

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நேற்றைய தினம் நடத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதில் தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை நிராகரித்துள்ளது என்றும், கல்வித்தரத்தில் நாட்டிற்கே வழிகாட்டியாக செயல்பட்டாலும், ‘போதும்’ என்றம் மனநிறைவை அடைந்துவிடக் கூடாது என்றும் பேசியிருந்தார்.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள்

இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “பல்கலைக்கழகங்களை உங்கள் தலைமைக் கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள்” என முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களே… நீங்கள் நேற்று. துணைவேந்தர்களை கூப்பிட்டு என்ன சொல்லி இருக்கிறீர்களோ அதுதான் புதிய கல்வி கொள்கை… நீங்கள் ஒருவர் பேசுவதற்காக மட்டும் எழுதி கொடுக்கப்பட்டது அல்ல அது.

மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையில். பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதை அறிமுகப்படுத்தும் போது.. மரியாதைக்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி சொன்னது.. ‘நம் இந்திய குழந்தைகளை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவது தான் இந்த கல்வி.’

ஆக புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக படிக்காமல்… மற்ற மாநிலங்கள் எல்லாம் அதைப் பின்பற்ற மாணவ மாணவிகளை உலக அரங்கிற்கு உயர்த்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மோடி எதிர்ப்பு என்ற கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள்.

உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும்… என்று என்று சொல்லிவிட்டு பல்கலைக்கழகங்களை உங்கள் தலைமைக் கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள். அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள்…” எனக் கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்', 'மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு' – விசிக தேர்தல் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள்...

Election 2026: பதவிக்காக பகையாகிறதா அப்பா – மகன் உறவு; தகிக்கும் தமிழக அரசியல் களம்

'தாயும் பிள்ளையும்தான் என்றாலும் வாயும் வயிறும் வேறு' என்பார்கள். தமிழக அரசியல்...

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் – வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14)...

“பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான...