22
April, 2026

A News 365Times Venture

22
Wednesday
April, 2026

A News 365Times Venture

`நேர்மைக்கு பரிசு டிரான்ஸ்பர்' மாற்றப்பட்ட சிவகாசி `நகர் நல அலுவலர்' – பின்னணி என்ன?

Date:

சிவகாசி மாநகராட்சி நகர் நல அலுவலரை மாநகராட்சி நிர்வாகத்துறை திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணியில் சிவகாசி மேயரின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “சிவகாசி மாநகராட்சி நகர் நல அலுவலராக பணியாற்றி வந்தவர் சரோஜா. சிவகாசி மாநகராட்சியில் தூய்மை பணியை மேற்கொள்ள மதுரையை சேர்ந்த ‘ராம் அண்ட் கோ’ எனும் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.

இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சியில் முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்வதில்லை என மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜாவுக்கு தொடர் புகார்கள் வந்தது.

சிவகாசி மாநகராட்சி

இதையடுத்து மாநகராட்சி இடங்களில் ஆய்வு நடத்திய நகர்நல அலுவலர் சரோஜா, தூய்மை பணிகள் சரிவர மேற்கொள்ளபடாததை உறுதிசெய்தார். இதைத்தொடர்ந்து ஒப்பந்த நிறுவனமான ராம் அண்ட் கோ நிறுவனத்துக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரை செய்தார். தூய்மை பணிகளை, சரிவர மேற்கொள்ளும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

இந்தநிலையில், நகர் நல அலுவலர் சரோஜா திடீரென சிவகாசி மாநகராட்சியில் இருந்து பணியிட மாற்றம் செய்ததோடு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பணியிட மாற்றத்தின் பின்னணியில் அதிகார அழுத்தமும், அரசியலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, நகர்நல அலுவலர் சரோஜாவை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, நிதி மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியதன் பேரில் அரசியல் அழுத்தத்தின் காரணமாக மாநகராட்சி நிர்வாகத் துறை, நகர்நல அலுவலர் சரோஜாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மேயர் சங்கீதா, நகர்நல அலுவலர் சரோஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பியதாக சொல்லப்படும் கடிதத்தின் நகல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் நகல்

அந்த கடிதத்தில், நகர்நல அலுவலர் சரோஜா சில பத்திரிகைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மாநகராட்சிக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார். ஆகவே அவரை பணியிடம் மாற்றம் செய்ய ஆவண செய்யவேண்டும்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா, இதற்கு முன்பு திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரிந்தபோது ஒரு மாதத்தில் ரூ.55 லட்சத்திற்கு பினாயில் வாங்கியதாக அதிகாரிகள் செய்த முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார். அங்கு, மாநகராட்சி தூய்மை பணி ஒப்பந்தம் எடுத்த நிறுவனமும் இதே ‘ராம் அண்ட் கோ’ நிறுவனம் தான்.

`நேர்மைக்கு பரிசு டிரான்ஸ்பர்' மாற்றப்பட்ட சிவகாசி `நகர் நல அலுவலர்' - பின்னணி என்ன?
சிவகாசி நகர்நல அலுவலர் சரோஜா

இந்தநிலையில் அதிகாரி சரோஜா, அங்கிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பணியிடத்தில் நேர்மையாக செயல்பட்டதற்காக நகர் நல அலுவலர் சரோஜா, திருநெல்வேலியிலிருந்து, சிவகாசிக்கும் தற்போது சிவகாசியிலிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? – அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை...

மேற்கு வங்கம்: 'எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை.!'- காரப்பொரி வாங்கி சாப்பிட்ட மோடியை விமர்சித்த மம்தா

294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத்...

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை...