13
September, 2026

A News 365Times Venture

13
Sunday
September, 2026

A News 365Times Venture

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" – தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

Date:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார்.

விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் திமுகவினர் பல்வேறு இடங்களில் நேற்று (செப்டம்பர் 12) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையிலும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அங்கே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார். ஆ.ராசாவின் பேச்சிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பின.

ஆ.ராசா பதிவு

ஆ.ராசா பதிவு

இதையடுத்து, ஆ.ராசா தனது பேச்சிற்கு விளக்கம் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;

என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை.

நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” – நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக,...

“எச்.ராஜா, ஆ.ராசா… என்ன வித்தியாசம்?” – பெண்கள் குறித்த பேச்சிற்கு வன்னி அரசு கண்டனம்

திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதைக் கொச்சைப்படுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில்...

அமெரிக்கா தாக்குதல்: 'மனிதநேயம் இருந்தால் 'இதை' தடுத்து நிறுத்துவார்களா?' – ஈரான் அதிபர் காட்டம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்கா...

7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வந்திருக்கும் ஜி ஜின்பிங்; மோடி – ஜி ஜின்பிங் என்ன பேசினார்கள்?

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காகப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்....