29
July, 2026

A News 365Times Venture

29
Wednesday
July, 2026

A News 365Times Venture

“நாட்டுக்காக தற்கொலை வெடிகுண்டோடு பாகிஸ்தானுக்குச் செல்வேன்'' – கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கான்

Date:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் நடத்திய தீவிரவாத தாக்குதல்தான் இது என இதுவரைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டாத இந்திய அரசு, பாகிஸ்தான் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானும் அதற்கு எதிர்வினையாற்றி வருகிறது.

Pahalgam Attack

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கெதிராகப் போர்ச் சூழல் வந்தால் போராடத் தயாராக இருப்பதாகவும், மோடி, அமித் ஷா தற்கொலை வெடிகுண்டு கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு செல்வேன் எனவும் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடக வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் ஜமீர் அகமது கான், “நாங்கள் இந்தியர்கள், நாங்கள் இந்துஸ்தானிகள். எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களுக்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டுமென்றாலும், நான் போராடத் தயாராக இருக்கிறேன்.

ஒரு அமைச்சராக, என்னை அனுப்பினால் முன்னின்று செல்வேன். தேவைப்பட்டால், நான் தற்கொலை வெடிகுண்டையும் அணிவேன். இதை, நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ நான் பேசவில்லை. நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், மோடியும் அமித் ஷாவும் தற்கொலை வெடிகுண்டைக் கொடுக்கட்டும், அதை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்வேன்” என்று கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான்
கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான்

முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, போர் தொடுப்பதற்கு ஆதரவாகத் தாங்கள் இல்லை என்றும், அமைதி நிலவ வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை மெட்ரோ: `அனுமதி கிடைக்காததற்கு முறையான திட்ட அறிக்கை தயாரிக்காததே காரணம்!’ – வானதி சீனிவாசன்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை, மதுரை மெட்ரோ...

'அம்மா உணவகத்தால் சென்னை மாநகராட்சிக்கு 1140 கோடி ரூபாய் இழப்பு!' – முதல்வருக்கு துணை மேயர் மெசேஜ்!

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக்...

`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' – ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் த.மா.க-வின் டெல்டா மண்டல செயல்வீரர்கள் கூட்டம், அதன்...

செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! – FIR விவரங்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன்...