11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

'நல்ல கேள்வி.. அடுத்த கேள்வி! – டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறித்து RTI-யில் கிடைத்த விநோத பதில்!

Date:

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை எத்தனை? அவற்றில் பள்ளி, கல்லூரிகளின் அருகிருந்த கடைகள் எத்தனை? அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டிருக்கின்றன? போன்ற தகவல்களை சமூக ஆர்வலர் ஒருவர் RTI மூலம் டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு டாஸ்மாக் நிறுவனம் கொடுத்திருக்கும் பதில் வினோதமாகவும் அதிர்ச்சியளிக்கும் வகையிலும் இருக்கிறது.

டாஸ்மாக்

காசிமாயன் என்கிற சமூக ஆர்வலர் கடந்த மாதம் மே 19 ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனத்திடம் சில தகவல்களை கேட்டு RTI பதிவு செய்திருக்கிறது செய்திருக்கிறார். அதற்கான பதிலை டாஸ்மாக் நிறுவனம் இப்போது கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன? என ஒரு தகவலை காசி மாயன் கேட்டிருக்கிறார். அதற்கு “கோப்பு நிலுவையில் உள்ளது தகவல் வழங்க இயலாது” என டாஸ்மாக் நிறுவனம் பதில் கூறியிருக்கிறது.

அதற்கு அடுத்ததாக, `பள்ளி, கல்லூரி, கோவில்களின் அருகே எத்தனை கடைகள் கண்டறியப்பட்டன?

அவற்றுள் எத்தனை கடைகள் மூடப்பட்டன அந்த கடைகளுடைய நம்பர் என்ன?

அந்தக் கடைகளில் எத்தனை பணியாளர்கள் பணியில் இருந்தனர்?

அவர்களுக்கு எங்கே மாற்றுப்பணி வழங்கப்பட்டிருக்கிறது?’ போன்ற தகவல்களையும் கேட்டிருந்தார். ஆனால், டாஸ்மாக் நிறுவனம் வினோதமாக ‘கேள்வி 1 க்கு கூறிய பதிலே இதற்கும் பொருந்தும்’ என ‘கோப்பு நிலுவையில் உள்ளது’ என்கிற பதிலையே அத்தனை கேள்விகளுக்கும் மேற்கோள் காட்டியிருக்கிறது.

அதாவது, ‘நல்ல கேள்வி…அடுத்த கேள்வி…’ என சினிமா காமெடி பாணியில் பதில் கூறியிருக்கிறார்கள்.

காசி மாயன்
காசி மாயன்

‘டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம் என முதல்வர் அறிவுப்பு வெளியிடுகிறார். ஆனால், தமிழகத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. அவற்றில் மூடப்பட்ட கடைகள் எத்தனை? போன்ற அடிப்படையான தகவலை கூட டாஸ்மாக் நிறுவனம் வழங்க மறுக்கிறது. இது டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையே இல்லையோ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது’ என்கிறார் ஆர்.டி.ஐ போட்ட சமூக ஆர்வலர் காசி மாயன்.

எத்தனை டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன என்பது ஒரு அடிப்படையான தகவல். அதைக் கூட வெளியில் கூற மறுப்பதன் மர்மம் என்னவென்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அறிவிக்கப்படாத மின்வெட்டு: 'மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்' – எடப்பாடி பழனிசாமி!

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து மின்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன...

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய...

"சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?" – தூத்துக்குடி சம்பவத்திற்கு பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் – சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ்,...