20
September, 2026

A News 365Times Venture

20
Sunday
September, 2026

A News 365Times Venture

"நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அண்ணாமலை இன்னும்…" – திருமாவளவன்

Date:

ஈரோட்டில் நான்கு நாள்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினரை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் விசாரணை நடத்திவருகிறது.

இவ்வாறிருக்க, இச்சம்பவத்தின் குற்றவாளிகளை இரண்டு வாரங்களில் போலீஸார் கைதுசெய்யவில்லை என்றால் மே 20-ம் தேதி தன்னுடைய தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் – பாஜக

இந்த நிலையில், சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவனிடம், அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருப்பது குறித்து பத்திரிகையாளர் தரப்பில் கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த திருமாவளவன், “பழைய தலைவர் என்பதை மறந்துவிட்டு, இன்னும் தலைவராக இருப்பதாக நினைத்துக்கொண்டு அவர் பேசிக்கொண்டிருக்கிறார். தன்னைத் தலைவராக எண்ணிக் கொண்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனா, அண்ணாமலையா என்பதை அவர்கள் முடிவுசெய்ய வேண்டும்” என்று கூறினார்.

மேலும், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து பேசிய திருமாவளவன், “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவாகியிருப்பதால் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்ற மாயையை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு ஏதுவான சாத்தியக்கூறுகள் இல்லை. அவர்களுக்குப் பாதிப்புகள் ஏற்படத்தான் வாய்ப்புகள் இருக்கிறதே தவிர, பலன் கூடுவதற்கு வாய்ப்பில்லை” என்றார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“சென்னை விமான நிலையம் தனியார்மயமாகிறதா?" – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களை ‘ஜிஎம்ஆர்’ நிறுவனம் நிர்வகித்து...

மத்திய அரசு நிகழ்ச்சி: முதலில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! – என்ன நடந்தது?

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 45 இடங்களில் அரசு பணிகளுக்குத்...

“ `ஆள்மாறி கொன்றுவிட்டோம்' என்கிறார்கள்; காற்றில் பறக்கிறது சட்டம் ஒழுங்கு" – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்....

`இன்னும் பழைய அரசாங்கத்தையே குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் நியாயமில்லை' – விஜய்யை சாடிய எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...