26
November, 2026

A News 365Times Venture

26
Thursday
November, 2026

A News 365Times Venture

நயினாருக்கு உறுதியான மாநில பொறுப்பு… அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பா? – அறிவித்த அமித் ஷா!

Date:

பாஜக மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லையென்று அண்ணாமலை கூறிய நாள்முதல், அடுத்து இவருக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கப்படும் அல்லது வழங்கப்படுமா என்பதே புதிராக இருந்தது. இத்தகைய சூழலில், கமலாலயத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கலில் கடைசி நேரத்தில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதால் அக்கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு விருப்பமனு தாக்கல் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

அதன்படி, மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்ய, போட்டியாக வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், நயினார் நாகேந்திரன் போட்டியின்றி மாநில தலைவராக தேர்வாகும் சூழல் உருவாகியிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகக்கூடும். இந்த நிலையில்தான், அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூசகமாக ட்வீட் செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில், “மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டும் வேட்புமனு வந்திருக்கிறது. தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் பாராட்டுக்குரிய சாதனைகளை அண்ணாமலை செய்திருக்கிறார். மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசென்றதிலும், கட்சியை கிராமந்தோறும் கொண்டுசென்றதிலும் அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது. அண்ணாமலையின் ஒருங்கிணைப்புத் திறனை கட்சியின் தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும்” என்று அமித் ஷா குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட உங்களுக்கு இனி சிக்கல் தான் விஜய் அவர்களே.!" – நயினார்

"சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே ‘Accused’ ஆக்கி வைத்துள்ள திரு....

அமித் ஷா புதுப்பித்த பழைய கூட்டணி; ஆம் ஆத்மியின் ரகசிய வாக்கு ஆயுதம்! – தகிக்கும் பஞ்சாப் களம்!

பாஜக–அகாலி தளம், ஆறு வருடங்களுக்கு முன் பிரிந்தவர்கள், இன்று மேடையில் கைகோர்த்து...

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு: ஆளுநரை நேரில் சந்தித்தது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க...

`ஆமா, பண்ணையார் தான்; நான் ஒன்றும் உழைத்து முன்னுக்கு வந்தவன் இல்லை.!" – கார்த்தி சிதம்பரம் பதில்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு...