நீட் தேர்வு வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக இந்திய பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
இது குறித்து காங்கிரஸ் சீனியர் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…
“போட்டித் தேர்வுகளில் நடக்கும் ‘வினாத்தாள் கசிவு’ போன்ற தீவிரமான பிரச்னைக்கும், அதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் சிக்குவதற்கும், விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது மட்டுமே முழுமையான தீர்வாகிவிடாது.
பல்வேறு குற்றங்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் 775 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.
சட்ட அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த விரைவு சிறப்பு நீதிமன்றங்களில் 2,45,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விரைவு சிறப்பு நீதிமன்றம் என்பது வெறும் ஒரு நீதிமன்றக் கட்டிடம் மட்டும் அல்ல. அதற்கு நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், அரசு வழக்கறிஞர்கள், நடைமுறை விதிகளைப் பின்பற்றுதல், புலனாய்வாளர்கள், கட்டளை ஆமையாளர்கள், சாட்சிகள் மற்றும் கூடுதல் நிதி ஆதாரங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன.
இதில் மிகப்பெரிய சவால் என்னவென்றால், தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாததே ஆகும்; நீதிபதிகளின் பல பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
மற்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, ஒரு விரைவு சிறப்பு நீதிமன்றத்தால் பயன் அளிக்க முடியும்.”
Setting up Fast Track Special Courts is not the whole answer to the grave problem of 'leaks' in competitive examinations and putting lakhs of students in peril
There are 775 FTSCs in India for trying various offences
According to the Ministry of Law, over 2,45,000 cases are…— P. Chidambaram (@PChidambaram_IN) July 24, 2026




