31
May, 2026

A News 365Times Venture

31
Sunday
May, 2026

A News 365Times Venture

'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா – மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம்

Date:

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்த கடுமையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக எம்.பி திருச்சி சிவாவிற்கு இடையே சுவாரஸ்யமான விவாதம் நடந்தது.

நேற்று மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இங்கிருக்கும் அத்தனை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும், ‘திருச்சி சிவா இந்தி பட பாடல்களை நன்றாக பாடுவார்’ என்பது தெரியும்.

‘அவர் நடிக்கிறார்’ நிர்மலா சீதாராமன் புகார்; ‘நான் நிறுத்திகொள்கிறேன்’ பதில் சொன்ன திருச்சி சிவா

அர்த்தம் தேடுகிறார்!

ஆனால், அவருக்கு அருகில் சஞ்சய் சிங் அமர்ந்திருப்பதால், திருச்சி சிவா ‘விகாஷ், சப்கா’ போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடுகிறார். ஆனால், அவருக்கு அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நன்றாக தெரியும்.

சஞ்சய் சிங் அருகில் அமர்ந்திருப்பதால் அது எதுவும் தெரியாததுப்போல நன்றாக நடித்துவிட்டார்.

அவர் நன்றாக பாடுவார் என்ற ரெக்கார்டிங் பூபேந்தர் யாதவ் ஜியிடம் உள்ளது” என்று கூறினார்.

என் நண்பர்களுக்காக…

இதற்கு பதிலளித்த திருச்சி சிவா, “நான் பாடல்கள் பாடுவேன் தான். இன்று இங்கு இல்லாத பெகல் ஜி தான் என்னை ஆங்கிலத்தில் எழுதி வைத்து இந்தி பாடலை பாட செய்தவர்.

எனக்கு பாடல்களின் பொருள் தெரியாது. அவர் தான் எனக்கு பொருளை விளக்குவார். இந்தி மொழிக்கோ, இந்தி பேசும் மக்களுக்கோ திமுக எதிராக இல்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

எங்களுக்கு அவர்களிடம் நட்பாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும். அவ்வளவு தான். அதற்காக இந்த மாதிரியான விஷயங்களை செய்கிறோம். இதை பாராட்ட வேண்டுமே தவிர, அரசியல் ஆக்கக்கூடாது.

அப்படி செய்தால், இந்த மாதிரியான விஷயங்களை நான் நிறுத்திகொள்வேன்.

இந்தி பிரசார சபா தலைமையகம் சென்னையில் உள்ளது. இந்தி பேசும் மக்கள் அங்கேயும் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர்களுக்காக தான் இதை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

‘நிர்மலா சீதாராமனுக்கு மிகவும் பிடித்த குரள்!’ – திருச்சி சிவா

நிர்மலா சீதாராமனுக்கு பிடித்த குறள்

அதன் பிறகு, மற்றொரு விவாதத்தில், திருச்சி சிவா,

`அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’

என்ற திருக்குறளை சொல்லி ‘நிர்மலா சீதாராமனுக்கு பிடித்த குறள்’ என்று குறிப்பிட்டார். இந்தக் குறளை இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினருடன் ஒப்பிட்டு கூறினார்.

தற்போது மாநிலங்களவை, மக்களவை என இரண்டிலும் வக்ஃபு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கண்டுகொள்ளாத துரைமுருகன்; கவனம்பெற்ற தவெக சுதாகர் – காட்பாடி எம்எல்ஏ அலுவலகத்துக்கு விடிவுக் காலம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காட்பாடி தொகுதியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்...

Vijay: "மதவாத இயக்கம் வந்துவிடாமல், மற்றொரு திராவிட இயக்கமாக தவெக வந்துள்ளது" – துரை வைகோ

"தவெக அரசு அமைந்திருப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளதாகப் பேசும் கட்சியினர், கடந்த...

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" – ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப்...