8
October, 2026

A News 365Times Venture

8
Thursday
October, 2026

A News 365Times Venture

தாராபுரம், மதுராந்தகம்: "தவெக 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும்" – செங்கோட்டையன் உறுதி

Date:

ஈரோடு மாவட்டத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கான நலத்திட்டங்களை இந்த அரசு தொய்வின்றி செய்து வருவதால், மக்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது.

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க நூற்றுக்கு இருநூறு சதவீதம் என்கிற மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக அமையப் போகிறது.

அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த இடைத்தேர்தல் களம் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவுள்ளது. எந்த அளவுக்கு என்றால், வருங்காலத்தில் வரக்கூடிய அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தி.மு.க- வோ அல்லது அ.தி.மு.க-வோ போட்டியிடவே யோசிக்கும் அளவிற்கும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கும் இந்தத் தேர்தலில் த.வெ.க-வின் வெற்றி அசுரத்தனமாக இருக்கும்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Trump: "அமைத்திக்கான நோபல் பரிசுக்கு என்னைவிட தகுதியான நபர் யாருமில்லை" – இன்னும் ஆசை போகாத ட்ரம்ப்

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப்...

இந்தியம்..!

Source link

SIR விவகாரம்: "துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்" – காங்கிரஸ் சரமாரி கேள்வி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

'இந்துவாக இருந்தும் செவ்வாய்க்கிழமை அசைவமா?' – ராகுல் குறித்து சர்ச்சை; கார்த்தி சிதம்பரம் பதிலடி

வாக்காளர் பெயர்கள் நீக்கம், சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ‘தலைமைத்...