10
October, 2026

A News 365Times Venture

10
Saturday
October, 2026

A News 365Times Venture

’தவெக-விற்கான மக்கள் ஆதரவு சரிந்துள்ளது’ – நயினார் நாகேந்திரன் கணிப்பு!

Date:

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளது. அதே முறையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி மாறி போட்டியிட்டு வெல்வது  ஆரோக்கியமான ஜனநாயகமாகக் கருத முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. குதிரை பேரம் நடைபெற்றதால்தான் இந்தத் தேர்தல் வந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் சுயநலத்திற்காக மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனிமேலாவது மக்களின் பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டுமே தவிர, சுயநலத்துடன் செயல்படக் கூடாது

கடந்த பொதுத்தேர்தலில் விஜய் ஐந்து தொகுதிகளுக்குச் சென்றுதான் பிரசாரம் மேற்கொண்டார். தற்போது ஒரு தொகுதியில் மட்டும் 39 இடங்களில் இறங்கி, வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்துள்ளார். வாக்குகளுக்குப் பணம் கொடுத்திருக்கின்றனர். முதலில் விஜய் வீட்டிற்குள் இருந்தார். நாங்கள் அவரை வெளியே வருமாறு கூறினோம், தற்போது அவர் வீதிக்கு வந்துள்ளார். ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு தமிழக வெற்றிக் கழகத்திற்கான மக்களின் ஆதரவு சரிந்துள்ளது. இல்லையென்றால் 30 முதல் 40 இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இனிவரும் காலங்களில் அவர்களின் செல்வாக்கு மேலும் சரியும்.

நயினார் நாகேந்திரன்

எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் சுமார் 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு கோடி பேர் உயிரிழந்தவர்கள். உயிரிழந்தவர்கள் சொர்க்கத்திலும் நரகத்திலும் இருக்கின்றனர், ஆனால் ராகுல் காந்தி அவர்களையெல்லாம் அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என்று கூறுகிறார். ராகுல் காந்தியையே அங்கு அனுப்பி, உயிரிழந்தவர்களையெல்லாம் அழைத்து வரச் சொல்ல வேண்டும். எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகே கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கிறது.

சென்னைக்கு வரும் ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திப்பது நேர விரயம்தான். முதலமைச்சர் மக்கள் மத்தியில் நடிக்கிறார். ஆனால் ராகுல் காந்திக்கு நடிக்கக்கூடத் தெரியவில்லை. தடுப்புவேலிகள் மீது ஏறி, சங்கிலியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறினாலே, இந்தியாவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது. அவர் இத்தாலிக்குச் சென்று குடியேறட்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

CJP: “டம்மி முதல்வர் யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்" – உதயநிதி ஸ்டாலின்

சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து பெசன்ட் நகரில் போராடிய 30க்கும் மேற்பட்ட...

அபிஜித் விமானத்தில் கைது; 30,000 போலீஸ் குவிப்பு; 250 ரயில்கள் ரத்து; என்ன நடக்கிறது டெல்லியில்?

சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று அழைக்கப்படும் எஸ்.ஐ.ஆர். திட்டத்தில் மோசடி செய்ததாகக்...

"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" – லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து...

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" – இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக...