20
September, 2026

A News 365Times Venture

20
Sunday
September, 2026

A News 365Times Venture

தவெக: “ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" – முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு

Date:

தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கு தமிழ்நாட்டின் மீது எந்த அக்கறையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய வேண்டும் என்றும், இந்தி மொழியை கற்க கூடாது என்ற குறுகிய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் வியப்பாக இல்லை. காரணம் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் மேகதாது அணை விவகாரம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் போன்ற வழக்குகளில் உங்களின் மெத்தனப் போக்கால் தமிழர்களின் உரிமைகளை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பறிகொடுத்து வருகிறீர்களே CM Sir.

முதல்வர் விஜய்

“தங்களின் டெல்லி எஜமான் பாஜகவின்” நன் மதிப்பை பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வாதிடாமல் தமிழ்நாட்டை அவமதிப்பதும்,தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதும், ஒன்றிய அரசு தரவேண்டிய கல்வி நிதியை கேட்டுப் பெறாமல் கள்ள மவுனம் சாதிப்பதும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒப்புதல் என்று தொடர்ந்து நேரடியாக ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டீர்களே CM sir !

ஆட்சிக்கு வந்த உங்களுக்கு கொள்கையோ, தமிழ் பற்றோ, தமிழ்நாட்டின் மீது பற்றோ, தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோ இல்லாமல், தங்களை சுற்றி இருக்கும் “ரெட்டி கேங் துணையோடு” ஆட்சி, அதிகாரம் மற்றும் பணம் மீது மோகம் கொண்டு பாஜகவின் உதவியோடு ஆட்சி அமைத்து சில கல்லாப்பெட்டி கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சியில் தொடரும் விஜய் அவர்களே! சிலரை சிலநாள் ஏமாற்றலாம்! பலரை பல நாள் ஏமாற்றலாம்! எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது CM sir !

உங்கள் மக்கள் விரோத போக்கை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் உங்கள் அரசியல் ஆட்டத்திற்கு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுகட்ட தயாராகி விட்டார்கள் CM Sir!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“ஸ்டாலின், பி.டி. ஆர்… தோற்றார்களா அல்லது தோற்கடிக்கப்பட்டார்களா?" – நடிகர் பிரகாஷ் ராஜ்

த.வெ.க ஆட்சி சரியில்லை என்றால், நான் கேள்வி கேட்பேன் என நடிகர்...

`பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! – என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்)...

தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: “இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" – கராத்தே தியாகராஜன் கேள்வி

தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை...

“தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன" – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ்...