3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

"தவெக முன்னிலை எனச் சூதாட்ட கும்பல் வதந்தி பரப்புகிறது; விஜய் பெயரில்…" – திருமா என்ன சொல்கிறார்?

Date:

நாளை (மே.4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக முற்போக்கு கூட்டணி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும்.

திருமாவளவன், ஸ்டாலின்

திமுக ஆட்சி தொடரும். திமுக கட்சிக்காக எங்களது தோழர்கள் ஆற்றியப் பணி அளப்பரியது. அதனை திமுக வேட்பாளர்களும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.

திமுக கூட்டணியைச் சிதறடிக்கப் பார்த்தவர்களின் முயற்சி தோல்வியடைந்து அவர்கள் ஏமாந்து போவார்கள். தவெக முன்னிலை எனச் சூதாட்ட கும்பல் வதந்தி பரப்புகிறது.

விஜய் பெயரில் நிறைய சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. தேர்தலுக்கு முன்பு திமுகவை முன்வைத்து சூதாட்டத்தை நடத்தினார்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அகில உலக அளவில் இது நடைபெறுகிறது. இப்போது தேர்தல் வாக்குப்பதிவிற்கு பின்பு விஜய்யை முன்வைத்து இந்தச் சூதாட்ட காய்களை நகர்த்துகிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TN Election Results: ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார்? – நாளை காலை தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! | Live Updates

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - தேசிய அளவில் உற்றுநோக்கப்படும் ஒன்றாக...

4 States Election Results: அனல் பறக்கும் அரசியல் களம் – வெல்லப் போவது யார்? – நாளை வாக்கு எண்ணிக்கை | Live Updates

புதுச்சேரி, கேரளா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள்...

முதல் தேர்தல் தொடங்கி இன்று வரை – கோட்டையைப் பிடித்தவர்கள், கோட்டை விட்டவர்கள் யார், யார்? | Depth

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 16 சட்டமன்றத் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன....