22
May, 2026

A News 365Times Venture

22
Friday
May, 2026

A News 365Times Venture

தவெக அமைச்சரவையில் இணைந்த விசிக, IUML; அமைச்சர்களாகப் பதவியேற்ற வன்னி அரசு, ஷாஜகான்

Date:

தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளைவிட கூடுதல் தொகுதிகளை வென்று, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் த.வெ.க தலைவர் விஜய்.

கடந்த 10-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மொத்தம் 32 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அமைச்சர் வன்னி அரசு பதவிபிரமானம்

அதே நேரம் தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என இரு கட்சிகளும் இடம்பெறுகின்றன என்ற செய்தி வெளியானது. ஆனால், இதை இரு கட்சிகளும் ஆலோசித்து வருவதாகவே தெரிவித்தனர்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறுகின்றன. அதன் அடிப்படையில், இன்று ஆளுநர் மாளிகையில் விசிக-வின் திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசுக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகானுக்கும் ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“அதிமுக எங்களின் உயிர் மூச்சு; அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச்செயலாளர்" – எஸ்.பி.வேலுமணி பேச்சு

இரண்டாக பிளவுபட்டுள்ள அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி அணியில் சிலருக்கு தமிழக வெற்றிக் கழகம்...

Startup சாகசம் 61 : ‘இறக்குமதிதான் தரம்’ என்ற மாயையை உடைத்த உள்ளூர் ஸ்டார்ட்அப் – ஆரா பயோடெக்னாலஜிஸ்

AURA BiotechnologiesStartup சாகசம்இந்தியா இன்று உலகின் மிகவேகமாக வளரும் பயோடெக்னாலஜி சந்தைகளில்...

விசிக Vs திமுக: “சுயநல சாணக்கியத்தனம் யாருடையது?" – முற்றும் வார்த்தைப்போர்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம்...

தமிழக அமைச்சரவை: "திமுக போல தவெக-வும் புறக்கணிக்கிறது" – கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்கள் ஆதங்கம்

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதுபோல், தவெக ஆட்சிலும்...