20
August, 2026

A News 365Times Venture

20
Thursday
August, 2026

A News 365Times Venture

"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வருந்துகிறார்கள்" – முன்னாள் அமைச்சர் பொன்முடி

Date:

தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, தொண்டர்கள் விழுப்புரம் அறிவாலயத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எப்போதும் எந்த வயதிலும், தி.மு.க.வின் கொள்கைக்காக பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திராவிட இயக்கச் சிந்தனைகளைப் பரப்பி அதை வேரூன்ற செய்தவர் நம் தலைவர் ஸ்டாலின்.

அவருடைய வழியில் நானும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நான் சர்ச்சையாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

பொன்முடி

அந்த நிகழ்ச்சியில் அப்படிப் பேசியதற்கு ஏற்கெனவே மன்னிப்பு கேட்டிருக்கிறேன். அதேபோல இந்த வழக்கைத் தொடர்ந்த சகோதரியிடமும் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்திருந்தேன். நம் தலைவர் ஸ்டாலின் மக்களிடையே மிகச் செல்வாக்கு பெற்று வருகிறார். த.வெ.க-வுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்குத் தற்போதிருக்கும் அரசியல் சூழலை மக்களே உணர்ந்து வருகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தற்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கெல்லாம் விரைவில் பதில் வரும். கல்லூரி மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மோடியை விடவும் கொடுமையான செயலை ராகுல் செய்கிறார் எனும்போது.!" – திமுக இரா.ராஜீவ்காந்தி பேட்டி

த.வெ.க அரசு அமைய, காங்கிரஸ் கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து, 'கூட்டணிக்குத் துரோகம்...

மேகதாது: 'நதிநீர் பங்கீடு அல்ல, நதிநீர் ஒத்துழைப்பு… நாம் நகர வேண்டிய நேரம்!" – டி.கே.எஸ் பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது 'தென்மாநில முதலமைச்சர்கள்...

"தீயசக்தி, தூயசக்தி எம்எல்ஏக்களுக்கு கடன் வாங்கி இலவச Car எதற்கு?" – முதல்வர் விஜய்யைச் சாடிய சீமான்

110 விதியின் கீழ் அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும்...

`பேச்சுவார்த்தைக்கு விருப்பமில்லை!’ – அடிதடி வழக்கில் அமைச்சர் மரியவில்சனின் சமரச முயற்சி தோல்வி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற...