12
October, 2026

A News 365Times Venture

12
Monday
October, 2026

A News 365Times Venture

தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு; இருளில் அமைச்சர்கள் அறை: 'போர்க்கால நடவடிக்கை தேவை'- அன்புமணி

Date:

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு பிரச்னையால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றன.

இன்று காலை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட மின்தடையால், முதல் தளத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

அப்பதிவில், ” தமிழ்நாடு முழுவதும் மக்களைப் பாதித்து வரும் மின்வெட்டு, தற்போது மாநில அரசின் தலைமையகமான தலைமைச் செயலகத்தின் செயல்பாடுகளையே முடக்கியிருப்பது பெரும் கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது. மாநிலத்தில் எந்தப் பகுதியும் விதிவிலக்கு இல்லாமல் மின்வெட்டால் பாதிக்கப்படும் அளவுக்குச் சூழ்நிலை மோசமடைந்துள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின்தடை, தற்போது தலைமைச் செயலகம் வரை நீடித்திருப்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. இந்தச் சூழல் உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் மின் தேவைகளுக்கும் மின் கிடைப்பளவிற்கும் இடையே உள்ள அதிகப்படியான இடைவெளியே இந்த மின்வெட்டுக்கு முதன்மை காரணமாகும்.

தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு
தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு

இந்த மின் பற்றாக்குறையைப் போக்க, முதலில் 2,000 மெகாவாட் மின்சாரமும், பின்னர் அதை 4,500 மெகாவாட்டாக உயர்த்தியும் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இத்தகைய அறிவிப்புகளுக்குப் பிறகும் மின்வெட்டும், தடங்கல்களும் ஏன் தொடர்கின்றன?

மின்வெட்டு என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். எனவே, தமிழ்நாட்டில் தொடரும் இந்த மின் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உக்ரைன் என்னவாகுமோ? ரஷ்யா உடன் 'டீல்' – ரூட்டை மாற்றும் ட்ரம்ப் – என்ன நடக்கிறது?

“ரஷ்ய அதிபர் புதினுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். இந்த ஒப்பந்தத்தின்...

“போராட வந்தவர்கள் குரலை ஒடுக்க முயல்வது கொடுங்கோல் ஆட்சி" – சாடும் டிடிவி தினகரன்

மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்....

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' – இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை...

Musk Vs Ambani: இந்தியாவின் டிஜிட்டல் சிம்மாசனத்திற்கு நடக்கும் யுத்தம் – இணையப் போரின் பின்னணி!

ஒருபுறம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சாம்ராஜ்யத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின்...