14
October, 2026

A News 365Times Venture

14
Wednesday
October, 2026

A News 365Times Venture

தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்; கேரளத்திற்கு ஆளுநர் மாற்றம்!

Date:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கும், கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநராகவும் நியமித்தது மத்திய அரசு.

தமிழ்நாடு, கேரளம்

நேற்று (அக்டோபர் 12) இந்திய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார் அர்லேகர்.

கேரள ஆளுநராகத் தற்போது சிக்கிம் மாநில ஆளுநராக இருக்கும் ஓம் பிரகாஷ் மாத்தூர் பொறுப்பேற்க உள்ளார்.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

வேறு ஆளுநர்கள்?

தமிழ்நாடு, கேரளத்திற்கு மட்டும் ஆளுநர்கள் மாற்றப்படவில்லை.

புதிதாக ஒடிசா ஆளுநராக பிரஜ் மோகன் ராம், கர்நாடக ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், உத்தராகண்ட் ஆளுநராக டாக்டர் தால் சிங் பிசென், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கௌதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அர்லேகரிடம் தவெக பட்டப்பாடு

கடந்த ஆட்சியில் திமுகவிற்கும், ஆளுநர் ரவிக்கும் முட்டல் மோதல்போக்கு தொடர்ந்துகொண்டேதான் இருந்தது.தவெக ஆட்சியமைத்ததிலிருந்து அர்லேகருக்கும், அவர்களுக்கும் பிரச்னை எதுவும் வரவில்லை.

ஆனால், அர்லேகரிடம் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைப்பதற்குள்ளேதான் படாதபாடுபட்டுவிட்டது தவெக.

ஆட்சியமைப்பதற்கு அனுமதி கோரி மட்டும் அர்லேகரை மூன்று முறை சந்தித்தார் தவெக தலைவர் மற்றும் இன்றைய முதல்வர் விஜய்.

‘பெரும்பான்மையைக் காட்டினால்தான் ஆட்சியமைக்க அனுமதிப்பேன்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார் அர்லேகர்.

எப்படியோ கூட்டணிக் கட்சிகளை அமைத்து இப்போது முதல்வராகப் பொறுப்பேற்றுவிட்டார் விஜய்.

ஆளுநர் vs திமுக, தவெக

ரவி ஆளுநராக இருந்த காலத்தில், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை ஒருமுறைக்கூட முழுமையாகப் படிக்கப்பட்டதில்லை. ஒன்று, சில வார்த்தைகள் விடுபட்டுப் படிக்கப்படும். இல்லையென்றால், முற்றிலும் படிக்கப்படாமல் போகும்.

அர்லேகர், விஜய்
அர்லேகர், விஜய்

ஆனால், தவெக ஆட்சியமைத்த முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை முழுமையாக வாசிக்கப்பட்டது.

மேலும், மத்திய அரசின் உத்தரவின்படி, ஆளுநர் உரைக்கு முன்பும், பின்பும் தேசிய கீதம் பாடப்பட்டது.

இதுவரை முதல்வர் – ஆளுநர் உறவு நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

விஜய்யும் மத்திய அரசுடன் இதுவரை இணக்கமாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இது மாறினால், ஆளுநரின் ஆட்டம் மாறுமோ, என்னவோ?!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மம்தா பானர்ஜியைக் குத்திக் கொல்ல முயற்சி? கத்தியை மறைத்து வைத்திருந்த பெண் கைது; என்ன நடந்தது?

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்கு வெளியில் முன்னாள்...

கேரள கவர்னராக ஓம் பிரகாஷ் நியமனம்; ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர கவர்னரானார்!

தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்...

'அதிமுகவிலிருந்து 15 பேர் தவெக வருவார்கள்; யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாக.!'-செங்கோட்டையன்

'அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வர இருக்கிறார்கள்' என்று...

"திமுக ஆட்சியில் ரூ.5-9-க்கு வாங்கிய ஒரு யூனிட் மின்சாரம் இப்போது ரூ.37-ஆ?" – TRB ராஜா கேள்வி

தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு தவெக அரசிற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது.இதற்கு...