19
November, 2026

A News 365Times Venture

19
Thursday
November, 2026

A News 365Times Venture

தமிழ்நாடு முதலீட்டு தகவல்கள் கசிவு: 15 பேரை அதிரடி நீக்கம் செய்த அமைச்சர் கீர்த்தனா?

Date:

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான ‘தமிழ்நாடு வழிகாட்டி’ (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 உயர் அதிகாரிகள், ரகசியத் தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு வழிகாட்டி எனும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாட்டுக்கு வரவிருந்த பல முக்கியத் தொழில் முதலீடுகள் திடீரென ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

அமைச்சர் கீர்த்தனா – முதலமைச்சர்‌ விஜய்

இது தொடர்பாக அமைச்சர் கீர்த்தனாவின் குழுவினர் நடத்திய தீவிர விசாரணையில், நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய முதலீட்டுத் தரவுகள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ரகசியக் காப்பு விதிகளை மீறியதாகக் கூறி ‘வழிகாட்டி’ நிறுவனத்தைச் சேர்ந்த 15 உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சியளிக்கும் திருப்பமாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூன்று அதிகாரிகள் தற்போது ஆந்திரப் பிரதேச அரசில் அதிகாரபூர்வமாகப் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவர்கள் ஏற்கனவே ஆந்திர அரசுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஆந்திர அமைச்சர் ஒருவர், முதலீடுகளை ஈர்ப்பது குறித்துத் தமிழகத்தை மறைமுகமாகச் சாடிப் பேசியிருந்த நிலையில், தற்போது இந்தத் தரவு கசிவு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராகச் சதி நடந்ததா அல்லது திட்டமிட்ட முறைகேடா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசுகளிடையே பெரும் சலசலப்பையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'விஜய்க்கு பிடித்தமானவர்; நிறைவேறாத மினிஸ்டர் ஆசை!' – வி.எஸ்.பாபுவின் தவெக கதை!

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகியிருக்கிறார். தவெகவில் கடந்த பிப்ரவரி மாதம்தான் இணைந்திருந்தார்....

`கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல்; விஜய் தன்னை நிரூபிக்க..!’- தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழிசை

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் குறுந்தகவல்...

தவெக-வில் இணைந்த மகள் பொன்னரசி; அதிமுக முன்னாள் அமைச்சர், இந்நாள் மா.செ சண்முகநாதன் ஷாக் – பின்னணி?

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக பார்க்கப்பட்டு வருபவர் சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்...

“`Start, Camera, Action' என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்"- எடப்பாடி பழனிசாமி

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்....