3
October, 2026

A News 365Times Venture

3
Saturday
October, 2026

A News 365Times Venture

`தமிழைவிட சம்ஸ்கிருதம்தான் பழைமையானது; தோல்வி பயத்தில் திமுக…' – மக்களவையில் பாஜக எம்.பி பேச்சு

Date:

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜார்கண்ட் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருக்கிறார். இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய அவர், “அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் தி.மு.க மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகிறது. தமிழ் ஒரு பழைமையான மொழி, ஆனால் சம்ஸ்கிருதம் தமிழைவிட பழைமையானது.

நிஷிகாந்த் துபே

தமிழ் பேசும், தெலுங்கு பேசும், கன்னடம் பேசும் பகுதி மட்டுமல்ல, நாடு முழுவதும் எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எல்லா இடங்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை செய்யப்படுகிறது. தி.மு.க மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி நாட்டைப் பிரிக்க விரும்புகிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தமிழ், தெலுங்கு, மைதிலி, சந்தாலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் எதிராகவே இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சிக்கிறது. ஆங்கிலத்தை திணித்து தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறது” என்றார். பாஜக எம்.பி-யின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Flydubai இணை விமானி ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ – நெதன்யாகு சொன்னது என்ன?

ஃபிளைதுபாய் விமானத்தின் விபரீத சம்பவத்திற்குக் காரணமானவர் ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல்ஹமாமி...

'2 நிமிடக் கதை' இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!

நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும்...

EC: 'SIR-ல் Form 6 குறித்து ஏன் மேற்கு வங்க தேர்தலின் போது சொல்லவில்லை?' – சிதம்பரம் கேள்வி

‘எங்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் 10 மாதங்களில் 14 முடிவுகள் எடுக்கப்பட்டது’ என்று...

'ஓமன் நாட்டில் விமானம் இயக்க தடை' Flydubai சம்பவத்திற்கு காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி யார்?

கடந்த 30-ம் தேதி, துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்த ஃபிளைதுபாய்...