20
October, 2026

A News 365Times Venture

20
Tuesday
October, 2026

A News 365Times Venture

"தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க"- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்?

Date:

‘நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு’ என்ற டைட்டில் சாங் மூலம் ஓட்டுகளை அள்ளி சந்தித்த முதல் தேர்தலிலேயே முதல்வராகி விட்டார் ஜோசப் விஜய்.

தேர்தலுக்கு வரும் போதும் சரி, தேர்தலில் வென்ற பிறகும் சரி தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மீட்டிங்கிலும் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு என்பது ஆரம்ப காலத்திலிருந்து ரசிகர் மன்றத்தில் பாடுபட்ட ரசிகர்கள்தான். எனவே அவர்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் இருக்கும்’ என்பனதான்.

ஆனால் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு அப்படி நடக்கிறதா என்றால் பாதிப்பேர் உதட்டைப் பிதுக்கிறார்கள்.

திருவில்லிபுத்தூரில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று சொல்லலாம்.

விபரம் தெரிந்த நாள் முதல் விஜய் ரசிகராக போஸ்டர் ஒட்டி வந்த ஒருவர் தவெக ஆட்சி அதிகாரத்திலிருக்கும் இந்த நேரத்தில் தனித்து விடப்பட்டிருக்கிறார்.

பதவி, பொறுப்பு ஏதுமின்றி தன்னந்தனி ஆளாக நிற்கும் அவரை நட்பு வட்டம், ஏன் சொந்தக் குடும்பத்தினரே ஏளனமாகப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

விஜய்

இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் தவெக வட்டாரத்தில் பேசினோம்.

”விருதுநகர் வடமேற்கு மாவட்டச் செயலாளரா இருந்தவர் மாரி செல்வம். சிவகாசி, திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதுதான் விருதுநகர் வடமேற்கு மாவட்டம்.

இவற்றில் தேர்தலின்போது சிவகாசியைக் கேட்டு வாங்கி விட்டார் கீர்த்தனா. திருவில்லிபுத்தூர் தொகுதி தனித்தொகுதி என்பதால் மாரிசெல்வத்தால் போட்டியிட முடியாத சூழல்.

எனவே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இயலாத சூழல். அப்போதே மாரி செல்வத்தின் குடும்பத்தினர், இவ்வளவு நாள் உழைத்ததற்குப் பலன் இதுதானா எனப் புழுக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.

திருவில்லிபுத்தூரை கார்த்திக்கிற்கும் சிவகாசியை கீர்த்தனாவுக்கும் தலைமை கொடுத்த பிறகும் அதை ஏற்றுக் கொண்டு தேர்தல் வேலை செய்ய ஆயத்தமானார் மாரிசெல்வம்.

ஆனால் கீர்த்தனா, கார்த்திக் இருவருமெ மாரிசெல்வத்துக்கு உரிய மரியாதை தரவில்லை. தேர்தலில் மனுத்தாக்கல் செய்யச் செல்லும் போதே இவரை அழைக்கவில்லை.

இது தொடர்பாக பொதுச்செயலாளர் ஆனந்திடம் தன் மனக்குமுறலை மாரிசெல்வம் வெளிப்படுத்தியதாகவும், தேர்தலுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாமென அவர் சொன்னதாகவும் சொன்னார்கள்.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

தேர்தல் முடிவடைந்து கீர்த்தனா அமைச்சராகவும் ஆகி விட்டார். அமைச்சரான பிறகு நிலைமை முன்பை விட மோசமாகி விட்டது. மா.செ என மாரிசெல்வத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை கீர்த்தனா.

அடுத்த சில தினங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை மாவட்டச் செயலாளர்களாக ஆக்க முடிவு செய்தது கட்சி. இதன்படி கீர்த்தனா, சிவகாசிக்குப் பொறுப்பானவராகி விட, சிவகாசி மாரி செல்வத்தின் கையை விட்டுப் போனது.

தொடர்ந்து மாரி செல்வத்தின் கையிலிருந்தது திருவில்லிபுத்தூர் மட்டும்தான். விருதுநகர் வடமேற்கு என்பதில் திருவில்லிபுத்தூர் மட்டுமே எனச் சுருங்கி விட்ட நிலையில், அதைக் குறி வைக்கத் தொடங்கி விட்டார், திருவில்லிபுத்தூரில் வென்ற கார்த்திக்.

இந்த நிலையில்தான் தற்போது திருவில்லிபுத்தூர் தொகுதியின் மாவட்டச் செயலாளராக கார்த்திக் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னரே போஸ்டர், பேப்பர் விளம்பரம் எனக் கார்த்திக்கின் ஆதரவாளர்கள் அதகளம் செய்யத் தொடங்கி விட்டனர்.

கார்த்திகேயன்
கார்த்திகேயன்

உள்ளூர் தொழிலதிபர்கள் கார்த்திக்குக்கு வாழ்த்துச் சொல்லி வருகின்றனர்,

ரசிகன், வேட்பாளர், எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர்… எனக் கார்த்திக்கை வாழ்த்தும் போஸ்டர்களை திருவில்லிபுத்தூரில் அங்கங்கே பார்க்க முடிகிறது.

ஆக, மாரிசெல்வத்தின் கையிலிருர்ந்த திருவில்லிபுத்தூரும் போய் விட்டது. இப்போது மாரிசெல்வம் தவெகவில் வெறும் தொண்டர் மட்டுமே” என்கிறார்கள்.

நாம் விசாரித்த வரை கட்சி அதிகாரபூர்வமாக இன்னும் கார்த்திக்கிற்குப் பொறுப்பு வழங்கவில்லை. ஆனால் செய்தித்தாளில் செய்தி வரும் அளவுக்கு லாபி செய்து வருகிறாராம் கார்த்திக்.

தொகுதியில் விஜய் ரசிகர்களாக இன்றும் வலம் வரும் வேறு சிலரிடம் பேச்சு கொடுத்தோம்..

”மாரி அண்ணன் ரொம்ப பாவம். வீட்டுலயே இதுக்குத்தான் காலங்காலமா இப்படி உழைச்சியானு ரொம்ப கேவலமா கேக்குறாங்க. இவரு மட்டுமில்ல. இவரை மாதிரி இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. மன்றத்துல இருந்து வந்தவங்களுக்குத்தான் சீட்னு பொதுச்செயலாளர் சொன்னதென்னவோ நிஜம்தான். ஆனா யதார்த்தம் வேற மாதிரி இருக்கு.

சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்கள்லயும் இதே பிரச்னை போயிடிருக்கிறதா சொல்றாங்க. அன்னைக்கு போஸ்டர் ஒட்டியவன் ஓரங்கட்டப்பட, நேத்துவரை வேறு கட்சியில் இருந்துட்டு இன்னைக்கு இங்க பதவிகளை அனுபவக்கிறாங்க சிலர். கார்த்திக்கின் பி.ஏ-வே அதிமுகவுல இருந்து வந்தவர்தான். இப்படியே போறது கட்சிக்கு நல்லதில்ல” என்கிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர்

மாரி செல்வத்திடமே பேசினோம் நாம்.

”கீர்த்தனாவுக்கு சிவகாசியில பொறுப்பு கொடுத்தப்ப எங்கிட்ட சொல்லிட்டுதான் அறிவிச்சாங்க. இப்ப கார்த்திக் திருவில்லிபுத்தூர் மாவட்டச் செயலாளர்னு அவருடைய ஆதரவாளர்கள் சொல்லிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். கட்சி இது தொடர்பா எங்கிட்ட எதுவும் பேசலை. எந்த அறிவிப்புன்னாலும் மா.செ ங்கிற முறையில எங்கிட்டப் பேசிட்டுதான் செய்வாங்கனு நம்பறேன்” என்கிறார்.

நடிகர் விஜய் மீது பிரியம் வைத்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி கைக்காசை செலவழித்து வந்தவர்கள் அவரது ரசிகர்கள். அவர்களைக் கைவிடுவதென்பது ஆரம்ப காலத்திலிருக்கும் கட்சிக்கு நல்லதல்ல. முதல்வர் விஜய் இதைக் கவனிப்பாரா?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

செஞ்சி சிறுமி மாயம்: “பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என்றவரின் பதில் என்ன?”- விஜய்க்கு கனிமொழி கேள்வி

பெருந்துறை செவிலியர் மற்றும் செஞ்சி சிறுமி சம்பவங்களைக் குறிப்பிட்டு திமுக நாடாளுமன்ற...

'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது...

'இது' நடந்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரசியல் தலையீடு ஏற்படும்! – மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 16-ம் தேதி,...

"SIR அவசியம்… அதேநேரம் இயந்திர வாக்கு பதிவு ’பக்கா’னு சொல்ல முடியாது" – சி.முருகன் IAS

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென்கிற குரல்கள் நாடெங்கும்...