12
September, 2026

A News 365Times Venture

12
Saturday
September, 2026

A News 365Times Venture

டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ – புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

Date:

டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார்

செப்டம்பர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடியும் புதினும் டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, இதே Aurus Senat காரில் ஒன்றாகப் பயணம் செய்தனர். பாரத் மண்டபம் வளாகத்திலேயே நடந்த இந்தப் பயணம், இரு நாடுகளின் நெருக்கத்தைக் காட்டும் காட்சியாகவும் பேசப்பட்டது.

வெளிநாட்டுக்குப் போனாலும்… கார் மட்டும் கூடவே!

பொதுவாக ஒரு நாட்டின் அதிபர் வெளிநாடு செல்லும்போது, அங்கு ஏற்பாடு செய்யப்படும் பாதுகாப்பு வாகனங்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் புதினின் விஷயத்தில் கதை வேறு.

அவருடைய பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக Aurus Senat-ஐயும் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்கின்றனர். டெல்லி வருவதற்கு முன்பே அவரது வாகனங்களும் பாதுகாப்புக் குழுக்களும் இந்தியா வந்துவிட்டது.

ஏன் இவ்வளவு பாதுகாப்பு?

Aurus Senat என்பது சாதாரண luxury limousine கிடையாது. புதினுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட presidential vehicle என்பதால், இதைச் சுற்றியே தனி பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும்.

சில சர்வதேச ஊடகங்கள் இதை “Fortress on Wheels” – சக்கரங்களில் செல்லும் கோட்டை என்றும் குறிப்பிடுகின்றன. காரின் முழுமையான பாதுகாப்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் பாதுகாப்பு அமைப்புகள் அதிபரின் high-security travel-க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

598 HP… ஆனால் power மட்டும் கதையல்ல!

Aurus Senat-ல் 4.4-litre V8 hybrid powertrain, சுமார் 598 horsepower என பல automotive reports குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த காரின் முக்கியத்துவம் வேகம் அல்லது luxury மட்டுமல்ல  பாதுகாப்புதான் இதன் உண்மையான அடையாளமாக உள்ளது.

இதனால்தான் புதின் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அவரது “security bubble”-ன் ஒரு பகுதியாக இந்தக் காரும் பயணிக்கிறது.

டெல்லி சாலையில் சில நிமிடங்கள் ஓடிய அந்த Aurus Senat.. ஒரு கார் மட்டுமல்ல; ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் – சரித் திடீர் திருமணம்!

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு பினராயி...

'ஆல் தி பெஸ்ட் நண்பா!' – ரேஸை தொடங்கி வைத்த விஜய்; சீறிப் பாய்ந்த அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய்...

'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' – குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக...