24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க செயலி; தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு – விவரம் என்ன?

Date:

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அதைத் தடுப்பதற்காக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

மதுபானம்

இதற்காக ‘எண்ட் டு எண்ட்’ என்னும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் மது பிரியர்கள் தங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகள் எங்கிருக்கின்றன, அங்கு என்னென்ன மது வகைகள் இருக்கின்றன மற்றும் அவற்றின் விலை என்ன என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

மேலும், பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான மது பாட்டிலைத் தேர்வுசெய்து ‘Google Pay’ போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம். பணம் செலுத்தியதும் அவர்களின் செல்போனுக்கு ஒரு ‘கியூஆர்’ குறியீடு அனுப்பப்படும்.

Google Pay
Google Pay

அதனை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் காண்பிக்கும் போது, ஊழியர்கள் அதைச் சரிபார்த்து உடனடியாய் மது பாட்டிலை வழங்கிவிடுவார்கள். இதனால் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முற்றிலுமாகத் தடுக்கப்படும்.

இந்தப் புதிய திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு முதற்கட்டமாக மாவட்டந்தோறும் உள்ள சூப்பர்வைசர்களுக்கும், அதைத் தொடர்ந்து விற்பனையாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர்; அது கோடிக்கணக்கான மக்களை..!"- தவெக-வைச் சாடிய ஸ்டாலின்

சென்னை திருவான்மியூரில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று...

இலவச சிலிண்டர்: “3 சிலிண்டர்கள் தானா? மீதி எப்போது?" – டிடிவி தினகரன் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2...

பரந்தூர்: “இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது?" – அண்ணாமலை கேள்வி

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' – தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை,...