20
November, 2026

A News 365Times Venture

20
Friday
November, 2026

A News 365Times Venture

சோத்துப்பாறை: அரசாணையின்றி திறக்கப்பட்ட பாசன நீர்; ரீல்ஸ் போட்டு அத்துமீறிய தவெகவினர்- என்ன நடந்தது?

Date:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தோத்துப்பாறை அணையில் அரசாணை இல்லாமல் தவெக நிர்வாகிகள் நீரை திறந்து விட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறையில் கிட்டத்தட்ட 2865- ஏக்கர் விளை நிலங்கள் இருக்கின்றன. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளான கைலாச பட்டி, லட்சுமிபுரம், வடுகப்பட்டி, மேல்மங்கலம் என பல்வேறு கிராமங்கள் 1040 -ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாகப் பெய்துள்ள நிலையில், சேத்துபாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் இங்கே சுற்றி இருக்கும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர் திறக்கப்படாமல் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து நீர் திறந்து விட்டிருக்கும் நிலையில், சோத்துபாறை அணையில் நீர் திறக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை அணுகாமலும், அரசாணை இல்லாமலும் தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி, புதிய ஆயக்கட்டு பாசனத்திற்காக சேர்த்துப்பாறை அணையில் இருந்து நீரை திறந்து விட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். இது சர்ச்சையாகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இது குறித்து பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசனிடம் கேட்டோம்.

“சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை பாசன விவசாயிகள் மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாயிகள் என யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அணையில் இருந்து வெளியேறும் வரை நீரை அரசாணை இல்லாமல் திறந்து விட்டது முற்றிலும் தவறானது. இதனால் விவசாய சங்கத்தினர் முறைப்படி புகார் அளித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மௌனம் காத்தது மனித உரிமை மீறல்" – டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவது என்ன?

"ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து மூன்று மாதங்கள் மருத்துவமனையும், அரசும்...

“நாங்க சலுகைகள் தருகிறோம்; வேலைவாய்ப்பு, ஊதியத்தை உயர்த்த நிறுவனங்கள் என்ன செய்தன?" – பிரதமர் மோடி

டெல்லியில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை...

வி.எஸ் பாபுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை வந்த ஆதவ் அர்ஜுனா – போலீஸ் குவிப்பு!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ...