8
June, 2026

A News 365Times Venture

8
Monday
June, 2026

A News 365Times Venture

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் தலைவலி; பண மோசடி வழக்கை விசாரிக்க ஆளுநர் 'கிரீன்' சிக்னல்!

Date:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள பண மோசடி வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்துள்ளார், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை, அதிமுக அரசாங்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது பலரிடம் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட வேலைகளை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி குறித்து புகார் பதிவாக, செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

இந்த வழக்குகளின் விசாரணை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்குகளுக்காகத்தான் செந்தில் பாலாஜி கடந்த 2023-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வழக்குகளின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு படி, ‘பொது ஊழியர்கள்’ மீது குற்றம் சாட்டப்பட்டால், அந்த வழக்கை விசாரிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

கடந்த வாரம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், செந்தில் பாலாஜி வழக்கு சம்பந்தமான ஆவணங்களுக்கு அனுமதி கொடுத்தார்.

செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு ஆளுநரின் ஒப்புதலும் தேவைப்பட்டது. அந்த ஒப்புதலைத் தற்போது ஆளுநர் அர்லேகரும் கொடுத்துவிட்டார்.

ஆக, இப்போது மீண்டும் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் விசாரணை சூடுபிடிக்கத் தொடங்க உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் போர்: `100 நாட்கள், 7000 உயிர்கள், முடிவற்ற அவலம்' – ட்ரம்ப் சொன்ன ‘விரைவான போர்’ இதுதானா?

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன....

"திமுக உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குரல் கொடுக்கும்; இதை எதிர்காலத்திலும் சொல்வேன்" – பெ.சண்முகம்

திமுக கூட்டணியில் இருந்து தான் கடந்தச் சட்டமனந்த் தேர்தலை சந்தித்தன விடுதலைச்...

பூசல்களுக்கு மத்தியில் இன்று 'இந்தியா' கூட்டணி கூட்டம்; நடைபெறும் இடத்திலேயே ட்விஸ்ட் | Live updates

இன்று டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம்!இன்று இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில்...

"'நோ கமென்ட்ஸ்' சொல்றதுக்கா இவ்வளவு பேர் கிளம்பி வந்தீங்க?" – தவெக அமைச்சரை விமர்சித்த சீமான்

சென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழீழ விடுதலைப் பாடகர் தேனிசை...