திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருக்கிறது என்றும் இது முழுக்க முழுக்க ரீல்ஸ் ஆட்சிக்காக, ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சி என்றும் திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் செய்திருந்தார்.
சூரசம்ஹார விழாவில் ஆகம விதிகள் எதுவும் மீறப்படவில்லை என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
“சூரசம்ஹார விழாவில் விதிகள் மீறப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். சரி எந்த விதியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் திருவரங்கத்தில் 50 கோடி மதிப்பிலான நிலத்தை சொந்தக் கட்சி அலுவலகம் நடத்துவதற்கு பெயர் மாற்ற அனுமதித்தார்.
கோயிலின் நிலத்தை திமுககாரர் பெயர் மாற்றி திமுகவின் கட்சி அலுவலகம் நடைபெற்று கொண்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதைக் கண்டுபிடித்து, அதன் பேரில் நடவடிக்கை எடுத்து, கைது செய்துள்ளோம். அப்போது எந்த விதிகளின் அடிப்படையில் கோயில் நிலத்தைத் திருடவிட்டீர்கள். திருடுவதை எப்படி வேடிக்கை பார்க்க விட்டீர்கள்.
கோயில் நிலத்தையெல்லாம் திருடி அபகரிக்கும் திமுகவினருக்கு இப்போது என்ன திடீர் அக்கறை வந்துவிட்டது. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை நிச்சயமாக இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவினர் என்னென்ன செய்துள்ளனர், கோயில் நிலத்தையெல்லாம் திமுகவினர் குத்தகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விட்டு சம்பாதித்தனர் என்பதையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் கொண்டு வருவோம். அதற்கு உதாரணம் திருவரங்கம் கோயில் நில விவகாரம்.

கோயில் நிலங்களையும், கோயில் சொத்துகளையும் திருடிவிட்டு விதிகளைப் பற்றியெல்லாம் அக்கறை உள்ளதுபோல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
பாடகர்களை பண்ணையார் மனநிலையில், தெருக்கூத்தாடிகள் என்று பேசுவது மற்றும் தவறான விஷயங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தால் அதற்கு கண்டிப்பாக எதிர்வினைகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




